ஆடி அமாவாசையில் இந்த 2 எழுத்து மந்திரத்தை மட்டும் சொன்னாலே போதும்...எந்த கஷ்டமா இருந்தாலும் நொடியில் மாயமாகும்

By Kalai Selvi  |  First Published Aug 4, 2024, 6:30 AM IST

Aadi Amavasai 2024 Manthiram : உங்கள் துயரம் எல்லாம் நீங்கி முன்னோர் ஆசி கிட்டி வாழ்வில் வளம் பெற ஆடி அமாவாசை அன்று கட்டாயமாக எல்லோரும் சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம். 


ஆடி அமாவாசை என்றாலே முன்னோர் வழிபாடு தான் முதன்மையாக இருக்கும். அனைவர் வீட்டிலும் அன்றைய தினம் பித்ரு வழிபாடு செய்து ஆசி  பெற்றுக்கொள்வார்கள். வீட்டில் முன்னோர் வழிபாடு செய்துவிட்டு, திதி தர்ப்பண காரியங்களிலும் ஈடுபடுவார்கள். பெரும்பாலானவர்களுக்கு பித்ரு சாபம் வாழ்க்கையை ஆட்டி படைக்கும்.  
 
உங்களுக்கு முன்னோர் ஆசி கிடைக்காமல் போனால் வீட்டில் மன நிம்மதியே இல்லாமல் சிரமப்படுவீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது. சிலர் திருமணம் கைகூடாமல் தவிர்ப்பார்கள். கடன் தொல்லை, மன அழுத்தம் போன்றவை பித்ரு சாபத்தினாலும் நடக்கும். இதை எல்லாம் சரி செய்ய ஆடி அமாவாசை வழிபாட்டை தவறாமல் செய்யுங்கள். இதற்காக நீங்கள் இரண்டு வரியில் உள்ள ஒரு மந்திரம் சொன்னாலும் போதும். 

இதையும் படிங்க:  ஆடி அமாவாசை 2024: அன்றைய தினம் காகத்திற்கு உணவு வைச்சா.. வீட்டுல பணம் பெருகுமா?

Tap to resize

Latest Videos

undefined

ஆடி அமாவாசையில் நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் அனுமானுடையது. அந்த வழிபாட்டில் உங்களுக்கு பூரண அருள் கிடைக்கும். பொதுவாக அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடு தான் பெரும்பாலானோர் செய்வார்கள். சிலர் அம்பாள் வழிபாடு செய்வார்கள். முக்கியமாக முன்னோர் வழிபாடு செய்வது வம்சதிற்கே நன்மை பயக்கும். இந்த நிலையில் சிலருக்கு அமாவாசை அன்று அனுமனை வழிபாடு செய்வதா என்றும் தோன்றலாம். கண்டிப்பாக செய்யலாம். அனுமன் வழிபாடு எந்த தோஷத்தையும் போக்க கூடியது. அப்படிப்பட்ட தெய்வம் தான் அனுமன். 

ஆடி அமாவாசை அன்று மாலை வேளையில் அனுமன் கோயிலுக்கு சென்று ‘ராம ராம’ மந்திரம் சொல்வதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். ராம மந்திரத்தின் மகிமையோ மகிமை.  ஆடி அமாவாசையில் அனுமனை மனதில் நினைத்து நம்பிக்கையுடன் இந்த ராம மந்திரத்தை சொல்வதால் குடும்பத்தின் மீது உள்ள முன்னோர் சாபங்கள் விலகும். இந்த ராம நாமத்தை சொல்வதால்  குடும்பத்தில் உள்ளவர்களின் தோஷங்கள் விரைந்து விலகிவிடும் என சொல்லப்படுகிறது. 

இதையும் படிங்க:  ஆடி அமாவாசையில் வழிபட சிறந்த நேரம் எது? தர்ப்பணம் கொடுக்க முடியாதவங்க என்ன செய்தால் முன்னோர் ஆசி கிடைக்கும்!!

உங்களின் கஷ்டங்கள் நீங்க ‘ஸ்ரீ ராம ஜெயம்’ என்ற மந்திர வார்த்தையை ஒரு நோட்டில்  108 முறை எழுதிவையுங்கள். இதனால் உங்களுடைய துன்பங்கள் நீங்கும். அந்த துன்பத்திலிருந்து வெளிவரும் சக்தியையும் மனவலிமையையும் அனுமன் தருவார். ஆடி அமாவாசையில் கண்டிப்பாக அன்னதானம் செய்ய வேண்டும். 

அன்னதானம் உணவாக இருக்கவேண்டும். ஆனால் அவை விலையுர்ந்த உணவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அன்னதானம் செய்ய வேண்டும் என்ற உங்கள் ஆர்வம் தான் முக்கியம். குறைந்தபட்சம் பிஸ்கெட் பாக்கெட் அல்லது பிரெட் பாக்கெட் கூட நீங்கள் வாங்கி தரலாம். பசியோடிருக்கும் ஒரு ஏழையின் பசியை தீர்த்தாலும் போதும். உங்களுக்கு கடவுள் ஆசி கிடைக்கும். ராம நாமம் சொல்லி மனப்பூர்வமாக ஆடி அமாவாசையில் செய்யும் அன்னதானம் உங்களுடைய வாழ்வில் இருக்கக்கூடிய துன்பம், துயரம் நீங்கும். நம்பி பிரார்த்தனை செய்யுங்கள். நன்மைகள் பெருகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!