ஆடி அமாவாசை அன்று காகத்திற்கு ஏன் உணவு அளிக்க வேண்டும் மற்றும் காகத்திற்கு உணவு வைப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதைக் குறித்து இங்கு பார்க்கலாம்.
காகம் சனி பகவானின் வாகனம் ஆகும். இதனை நாம் வீட்டிலோ அல்லது கோவில்களிலோ வளர்ப்பதில்லை. நாம் காகத்திற்கு உணவளித்தால் அது தானத்திற்கு சமம். ஆனால் நாம் வீட்டில் வளர்க்கும் பறவைகளுக்கு உணவளிப்பது தானம் ஆகாது.
தானம் என்பது நமக்கு சம்பந்தமில்லாத உயிரினங்களுக்கு அல்லது மனிதர்களுக்கு உணவு வழங்குவது ஆகும். இதன் அடிப்படையில் தான் காகம் யாருக்கும் சொந்தம் அல்ல என்பதால் காகத்திற்கு உணவளிப்பது முற்றிலும் தானமாகிறது. அதுபோல் நாம் காகத்திற்கு உணவு அளித்து வந்தால் நம் முன்னோர்கள் உணவளிப்பதற்கு சமம் என்ற ஒரு நம்பிக்கை உண்டு. ஆகவே தான் அதனை நாம் வருடங்களாக கடைப்பிடித்து வருகிறோம். மேலும் காகத்திற்கு எந்த மாதிரியான உணவை வழங்கினாலும் சீக்கிரம் செரிமானம் ஆகிவிடும். மனிதர்கள் அளிக்கும் உணவை காகம் தான் மட்டும் உண்ணாமல் தன் குஞ்சுகளுக்கும் வழங்கி உண்ணும்.
காகத்திற்கு உணவளிக்கும் முறை:
அமாவாசை நாளை தவிர மற்ற நாட்களில் காகத்திற்கு குளிக்காமல் உணவளிக்கலாம். அதுபோல் அமாவாசை நாளில் விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக குளிர்த்த பின்பு தான் காகத்திற்கு உணவளிக்க வேண்டும். மேலும் காகத்திற்கு அமாவாசை அன்றுதான் உணவு வழங்க வேண்டும் என்றில்லை; மற்ற எல்லா நாட்களிலும் கூட உணவு வழங்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.
இதையும் படிங்க: Aadi Sevvai 2023: ஆடி செவ்வாய் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க!!
ஒருவேளை நீங்கள் தினமும் காகத்திற்கு உணவு வைத்தால் உங்களுக்கு அடுத்த பிறவியில் புண்ணியம் சேரும் மற்றும் உங்கள் வாரிசுகளும் அந்தப் புண்ணியம் சேரும். இதுபோல் மனிதர்கள் மற்றும் காகம் போன்ற உயிரினங்களுக்கு நீங்கள் உணவளிப்பதன் மூலம் நீங்கள் செய்த பாவம் குறைந்து புண்ணியம் சேரும். எனவே அமாவாசை அன்று இப்படி தானம் செய்யுங்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய புண்ணியம் கண்டிப்பாக கிடைக்கும்.