ராகு காலத்தில் இதை செய்தால் போதும்! கண் திருஷ்டி அனைத்தும் காணாமல் போகும்!

By Asianet Tamil  |  First Published Mar 26, 2023, 9:02 PM IST

கண் திருஷ்டியை நீக்கவும், மறைமுக எதிரிகளிடமிருந்து எதிர்மறை ஆற்றலில் இருந்தும் நம்மை தற்காத்துக் கொள்ள ஒரு சக்தி வாய்ந்த மந்திரம் உள்ளது. அதனை எப்போது கூற வேண்டும். எப்படி  கூற வேண்டும் எப்படி சொல்ல வேண்டும் போன்ற தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 


நாம் பாடுபட்டு ஓடி ஓடி உழைத்து உயர்வதை பார்த்து சிலர் பொறாமை கொள்வார்கள்,சிலர் திருஷ்டி வைப்பார்கள். சிலர் எதிர்மறை ஆற்றல் மூலமாக நமக்கு தீங்கு நேர வைப்பார்கள். இதனை நமக்கு நன்கு தெரிந்தவர்களும் செய்வார்கள், நமக்கே தெரியாத சிலரும் நம் முன்னேற்றத்தை பார்த்து இவ்வாறு செய்வார்கள்.

இப்படியான கண் திருஷ்டியை நீக்கவும், மறைமுக எதிரிகளிடமிருந்து எதிர்மறை ஆற்றலில் இருந்தும் நம்மை தற்காத்துக் கொள்ள ஒரு சக்தி வாய்ந்த மந்திரம் உள்ளது. அதனை எப்போது கூற வேண்டும். எப்படி  கூற வேண்டும் எப்படி சொல்ல வேண்டும் போன்ற தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

நமது இன்றைய வாழ்வில் நமது முன்னேற்றத்தையும் ,வளர்ச்சியையும் பொறாமை கொண்டு பலர் நமக்கு தெரிந்தும், தெரியாமலும் பல்வேறு தடங்கல்கள், இன்னல்கள் மற்றும் சிக்கல்களை உருவாக்குகிறார்கள். கல்லடி பட்டாலும் கண் அடி படக் கூடாது என்று சொல்வார்கள். அப்படி கண் திருஷ்டி நமக்கு ஏற்பட்டால், நமக்கு பல்வேறு விதங்களில் வாழ்வில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். இதனை சரி செய்ய இந்த மந்திரமும் எலுமிச்சையும் போதும். இந்த மந்திரத்தின் மகிமையானது நமது மறைமுக எதிரியை நசுக்கும் தவிர அவர்களின் சூழ்ச்சிகள் எதுவும் நம்மை நெருங்காது. 

மந்திரம்:

ஓம் சத்ரு தமன் ஹூம் ஃபட் ஸ்வாஹா !

எப்படி சொல்வது:

ராகு காலத்தில்  வலது கையில் ஒரு எலுமிச்சை பழம் எடுத்து, பின் வலது கையினை மூடிக் கொண்டு 108 முறை  மேற்கூறிய  மந்திரத்தை கூற வேண்டும். பின் அந்த எலுமிச்சை பழத்தை ஓடும் நதியில் அல்லது கடலில் வீசி விட வேண்டும். நீங்கள் வசிக்கும் ஊற்றில் நீர் நிலைகள் இல்லாத பட்சத்தில் உங்கள் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத தனி பகுதிக்கு (மரங்கள் அடர்ந்து காணப்படும் ) சென்று ஒரு மறைவான இடத்தில் தூரமான இடத்தில் ஒரு சிறு துளையிட்டு புதைத்து விட வேண்டும்.

இவ்வாறு மறைவான இடத்தில் மண்ணுக்குள் புதைப்பதால், நம் கண்ணுக்கு தெரியாத எதிரிகளும் புதைந்து விடுவார்கள். இவ்வாறு செய்வதால் மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தொந்தரவுகள், தடைகள், இன்னல்கள், பிரச்சனைகள் மற்றும் கண் திருஷ்டி போன்றவை நீங்கும். இது மிக எளிமையான அதே நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் மற்றும் பரிகாரம் ஆகும். இதை ராகு காலத்தில் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமையில் வரும் ராகு காலத்தில் செய்வது மிகச் சிறப்பாகும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையுங்கள்.  

Tap to resize

Latest Videos

வாட்டர்மெலன் ஜெல்லி- எவ்ளோ சாப்பிட்டாலும் பத்தல என்பார்கள் உங்கள் வீட்டு குட்டிஸ்!

click me!