மயூர நாட்டியாஞ்சலி; பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்த கலைஞர்கள்

By Velmurugan s  |  First Published Feb 16, 2023, 10:34 AM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் 17ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பரதநாட்டிய கலைஞர்கள் நடனமாடிய காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள புகழ்வாய்ந்த மாயூரநாதர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 17ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பாக வருகின்ற 18ம்தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tap to resize

Latest Videos

undefined

மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி மதிவாணன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்  மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர். 

இதில் பத்மஸ்ரீ லீலா சாம்சன் மற்றும் சென்னை, கோவை, சேலம், மயிலாடுதுறை, பெங்களூரு, வாலாஜா மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். 

மங்கள இசையுடன் துவங்கிய நிகழ்வில்  பல நாட்டியக் கலைகளின் சங்கமம் பரதம், கதக், ஒடிசி, குச்சிப்புடி, மோகினியாட்டம் உள்ளிட்டவற்றை  ஒரே நேரத்தில் அரங்கேற்றிய வந்தே பாரதம் நடனம் பார்வையாளர்களை கவர்ந்து மெய்சிலிர்க்க வைத்தது. ஏராளமானோர் ஆர்வமுடன் மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

click me!