அன்றாட வாழ்க்கையில் இந்தச் சிறிய மாற்றங்களை தொடர்ந்து பின்பற்றி வந்தால், குறிப்பிடத்தக்க அளவு எடை இழப்பு சாத்தியம். அதுமட்டுமின்றி, உடல் ஆரோக்கியம் பற்றி கவலையில்லாமல் இருக்கலாம். உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும்போது ஆயுளும் அதிகரிக்கிறது.
உடல் எடையைக் குறைப்பது இதய நோய், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களின் ஆபத்தை குறைக்கிறது. மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரமும் உயர்கிறது. தினசரி வாழ்க்கையில் சிறிய மாற்றங்கள் செய்வது எடையைக் குறைக்க உதவும்.
திறம்பட உடல் எடையை குறைக்க உதவும் சில எளிய குறிப்புகளை இத்தொகுப்பில் பார்க்கலாம். இந்தக் குறிப்புகளைத் தொடர்ந்து பின்பற்றும்போது, எடை குறைவது மட்டுமின்றி ஆரோக்கியத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உண்டாவதை உணரலாம்.
undefined
1. அதிக தண்ணீர் குடிக்கவும்
தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பசியைக் குறைக்கவும் உதவுகிறது. இது உணவின் மூலம் குறைந்த கலோரியை எடுத்துக்கொள்ள வழிவகுக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம். ஒவ்வொரு வேளையும் உணவு உட்கொள்வதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம். இது சாப்பிடும் உணவின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
2. நார்ச்சத்து உணவுகள்
நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்குகிறது. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதிகப்படியான உணவு உட்கொள்வதைக் குறைக்கிறது. பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் போன்ற நார்ச்சத்துள்ள உணவுகளை ஒவ்வொரு உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம்.
3. புரதச்சத்து மிக்க உணவு
புரதச்சத்து நிறைந்த உணவைப் சாப்பிடுவது பசியைக் குறைக்கிறது. தசைகளைப் பராமரிக்க உதவுகிறது. ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் சிக்கன், மீன், பீன்ஸ், தயிர் போன்ற ஏதாவது ஒன்றைச் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு வேளை உணவில் 20-30 கிராம் புரதம் இருப்பது நல்லது.
முதல் முறையாக நிலவின் மண் மாதிரியை பூமிக்குக் கொண்டுவந்த சீனா! விண்வெளி துறையில் புதிய சாதனை!
4. உணவில் கவனம் தேவை
சாப்பிடும்போது உணவில் கவனத்துடன் சாப்பிடுவது அவசியம். இது அதிகப்படியான உணவு எடுத்துகொள்வதைக் குறைக்கிறது. மெதுவாக சாப்பிடலாம். உணவை நன்கு மென்று, ருசித்துச் சாப்பிட வேண்டும். சாப்பிடும்போது டிவி அல்லது ஸ்மார்ட்போன்கள் போன்ற கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும்.
5. போதுமான தூக்கம் வேண்டும்
போதுமான தூக்கமின்மை பசியைத் தூண்டும் ஹார்மோன்களை சீர்குலைக்கும். இது பசியின்மை அல்லது ஆரோக்கியமற்ற உணவுகளை நாட வழிவகுக்கும். இரவில் 7-9 மணிநேரம் ஆழமான உறக்கம் தேவை. வழக்கமான உறங்கும் நேரம் ஒன்றை நிர்ணயித்து, தினமும் அந்த நேரத்தில் தூங்குவதை வழக்கமாக வைத்துக்கொள்ளவும்.
6. அளவைக் குறைக்கலாம்
உணவின் அளவைக் குறைக்க வழக்கமாக பயன்படுத்தும் தட்டு, கிண்ணம், கரண்டி போன்ற பொருட்களை சிறிய அளவில் வைத்துக்கொள்ளலாம். இது உணவு உட்கொள்வதைக் கட்டுப்படுத்த உதவும். இதன் மூலம் பரிமாறும்போதும் அளவைக் குறைத்துக்கொள்ளலாம்.
7. பானங்கள், சிற்றுண்டிகளைக் குறைக்கவும்
இனிப்பான பானங்கள் மற்றும் தின்பண்டங்களில் கலோரிகள் அதிகமாக இருப்பதால் அவை எடையை அதிகரிக்கலாம். இனிப்பான பானங்களுக்குப் பதிலாக தண்ணீர், மூலிகை தேநீர் அல்லது பால் இல்லாத காபியை அருந்தலாம். இனிப்புகள் மற்றும் தின்பண்டங்களுக்குப் பதிலாக பழங்கள், பருப்புகள், தயிர் போன்ற ஆரோக்கியமான தின்பண்டங்களைச் சாப்பிடலாம்.
போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் ரூ.5,000 மட்டும் முதலீடு பண்ணுங்க! சொளையா 3.5 லட்சம் கிடைக்கும்!
8. சுறுசுறுப்பு
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும் வகையில் முழு நாளையும் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். இது உடலில் கலோரியின் அளவைக் குறைக்க உதவும். தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. படிக்கட்டுகளில் ஏறுதல், இடைவேளையின் போது நடப்பது, சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வது போன்ற உடல் செயல்பாடுகளை அன்றாட வேலையாக மாற்றிக்கொள்ளலாம்.
9. உணவைத் திட்டமிடுதல்
உணவு சமைக்கும்போதே ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு திட்டமிட வேண்டும். குறிப்பாக ஸ்னாக்ஸ் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இவ்வாறு திட்டமிட்டு உண்ணும் பழக்கம் துரித உணவுகள் மீது ஆசையைக் குறைக்க வழிவகுக்கும். இதனால் உண்ணும் அளவையும் குறைக்க முடியும்.
10. மன அழுத்தத்தைக் குறைத்தல்
நாள்பட்ட மன அழுத்தம் கட்டுப்பாடு இல்லாத உணவுப் பழக்கத்திற்கு வழிவகுக்கும். யோகா, தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் அல்லது இயற்கைச் சூழலில் நேரத்தைச் செலவிடுதல் போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்கும். ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் மனம் திறந்து பேசுவதும் மன ஆரோக்கியத்திற்கு உதவும்.
அன்றாட வாழ்க்கையில் இந்தச் சிறிய மாற்றங்களை தொடர்ந்து பின்பற்றி வந்தால், குறிப்பிடத்தக்க அளவு எடை இழப்பு சாத்தியம். அதுமட்டுமின்றி, உடல் ஆரோக்கியம் பற்றி கவலையில்லாமல் இருக்கலாம். உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும்போது ஆயுளும் அதிகரிக்கிறது.
ஒரே நாடு ஒரே சார்ஜர்! ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு செக் வைக்கும் அதிரடி உத்தரவு!