Padai Thalaivan : விஜயகாந்தின் கேமியோ கைகொடுத்ததா? படைத்தலைவன் விமர்சனம் இதோ

Published : Jun 13, 2025, 05:24 PM IST
Padai thalaivan

சுருக்கம்

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள படைத்தலைவன் படத்தின் எக்ஸ் தள விமர்சனத்தை பார்க்கலாம்.

Padai Thalaivan Twitter Review : கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படம் படைத் தலைவன். இப்படத்தை அன்பு இயக்கி உள்ளார். இப்படத்தில் சண்முகப்பாண்டியனுக்கு ஜோடியாக யாமினி சந்தர் நடித்துள்ளார். இப்படத்தை ஜெகநாதன் பரமசிவன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் கஸ்தூரி ராஜா, முனீஸ்காந்த், கருடன் ராம், யூகிசேது, அருள்தாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படைத் தலைவன் படம் யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் ஏஐ மூலம் கேப்டன் விஜயகாந்தும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இப்படம் கடந்த மாதமே ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று இப்படம் 500க்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதை பார்க்கலாம்.

படைத் தலைவன் ட்விட்டர் விமர்சனம்

படைத் தலைவன் நல்ல கதைக்களம் இருந்தாலும் மோசமான திரைக்கதையால் படம் சொதப்பியுள்ளனர். செண்டிமெண்ட் மிகவும் ஓவராக உள்ளது. ரன்னிங் டைம் குறைவாக இருந்தாலும் படம் சலிப்படைய செய்கிறது. சண்முக பாண்டியன் நடிப்பு ஓகே தான். வி.எஃப்.எக்ஸ் மோசமாக உள்ளது. சண்டைக் காட்சிகள் அருமை. படத்தின் பாசிடிவ் கேப்டன் விஜயகாந்த் தான். அவரை இரண்டு நிமிடம் ஏஐ மூலம் கேமியோ காட்சியில் பார்க்கலாம் என பதிவிட்டுள்ளார்.

 

 

நல்ல கதைக்களத்துடன் வந்துள்ள ஒரு ஆவரேஜ் திரைப்படம் தான் இந்த படைத்தலைவன். கதையும், கண்டெண்ட்டும் நன்றாக இருந்தாலும் அதை காட்சிப்படுத்திய விதம் சரியில்லை. விஜயகாந்த் ரெபரன்ஸ் அருமை. ஆனால் ஆக்‌ஷன் காட்சிகள் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம். எமோஷன் ஓவராக உள்ளது சலிப்படைய செய்துள்ளது. மொத்தத்தில் நல்ல முயற்சி என குறிப்பிட்டுள்ளார்.

 

 

படைத்தலைவன் படம் பார்த்த பிரபல விமர்சகரான பிரசாந்த், சண்முகப்பாண்டியன் தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் தொடர்ச்சியாக அழுதுகொண்டே இருப்பது ஆடியன்ஸை கடுப்பாக்கும் விதமாக உள்ளது என்றும் படத்திற்கு வந்துள்ள கூட்டம் மொத்தமும் விஜயகாந்த் என்கிற ஒற்றை மனிதருக்காக தான் என பதிவிட்டுள்ளார்.'

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மம்மூட்டியின் ‘களம்காவல்’ மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?