சந்தானத்தின் பில்டப் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? 80ஸ் பில்டப் படத்தின் விமர்சனம் இதோ

By Ganesh A  |  First Published Nov 24, 2023, 1:06 PM IST

கல்யாண் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் திரைக்கு வந்துள்ள 80ஸ் பில்டப் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.


தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த நடிகர் சந்தானத்துக்கு கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி திருப்புமுனை கொடுத்தது. இதையடுத்து பார்முக்கு வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிக் என்கிற அட்டர் பிளாப் படத்தை கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் சந்தானம். அந்த தோல்வி இருந்து மீண்டு வர அவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படம் தான் 80ஸ் பில்டப்.

இப்படத்தை கல்யாண் இயக்கி இருக்கிறார். இவர் குலேபகாவலி, ஜாக்பாட் போன்ற காமெடி படங்களை இயக்கியவர் ஆவார். சந்தானத்துடன் இவர் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளதால், இப்படத்தையும் காமெடி கதையம்சம் கொண்ட படமாகவே உருவாக்கி இருக்கிறார் கல்யாண். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக ராதிகா பிரீத்தி நடித்துள்ளார். இவர் சன் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஆவார்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

80ஸ் பில்டப் படத்தில் சந்தானத்துடன் தங்கதுரை, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் என மிகப்பெரிய காமெடி பட்டாளமே நடித்துள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டாக ரிலீஸ் ஆகி உள்ளது. 80ஸ் நாயகன் கமல்ஹாசனின் ரசிகனாக இப்படத்தில் நடித்திருக்கிறார் சந்தானம். 

இப்படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த இயக்குனர் கல்யாண் மற்றும் நடிகர் தங்கதுரை ஆகியோர் ஏசியாநெட் தமிழுக்கு அளித்த பேட்டியளித்தனர். அப்போது பேசிய தங்கதுரை, இதுவரை சந்தானம் மற்ற ஹீரோக்களின் லவ்வுக்கு உதவி செய்யும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இப்படத்தில் நான் சந்தானத்தின் லவ்வுக்கும் உதவி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சியாக இருந்ததாக கூறினார்.

இதையடுத்து பேசிய படத்தின் இயக்குனர் கல்யாண், இப்படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் என கூறினார். அது 80ஸ் பில்டப் ஆக வருமா அல்லது 90ஸ் பில்டப் ஆக வருமா என்கிற கேள்விக்கு நிச்சயம் 80ஸ் பில்டப் ஆக தான் வரும் என கூறினார். இப்படம் பார்த்த ரசிகர்கள் சொன்ன முழு விமர்சனத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... இப்ப தான் நடிக்க வந்தாங்க அதுக்குள்ள திருமணமா? சிம்பிளாக நடந்து முடிந்த குட் நைட் பட நடிகையின் நிச்சயதார்த்தம்

click me!