
Kuberaa Movie Twitter Review : நடிகர் தனுஷ், இயக்குனர் சேகர் கம்முலா உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் குபேரா. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகாவும், வில்லனாக நாகார்ஜுனாவும் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். நிகேத் பொம்மி இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். கார்திகா ஸ்ரீநிவாஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளை ஸ்டண்ட் ஸ்ரீ வடிவமைத்து இருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி உள்ளது.
குபேரா திரைப்படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரராக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி இருந்தது. இப்படம் மூன்று மணிநேரம் 2 நிமிடம் ரன்னிங் டைம் கொண்டது. இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. குபேரா படம் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் ரிலீஸ் ஆகிறது. ஆனால் அமெரிக்காவில் இத்திரைப்படம் இன்று அதிகாலையிலேயே திரையிடப்பட்டது. அங்கு இப்படத்தின் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனத்தை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
குபேரா திரைப்படத்தில் தனுஷ் ஆஸ்கர் லெவல் பெர்பார்மன்ஸை கொடுத்திருக்கிறார். இப்படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி நன்றாக உள்ளது. தனுஷுக்கு முதல் 300 கோடி வசூல் படமாக குபேரா இருக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான படங்களில் குபேரா சிறந்த படம். இது சேகர் கம்முலாவின் படம், தனுஷின் மாஸ்டர் பீஸ் திரைப்படம், நாகார்ஜுனாவின் விஸ்வரூபம் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் தாண்டவம். கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் படம் ஒர்த். ஒரு சீன் கூட படத்தில் போர் அடிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
குபேரா பார்க்கக்கூடிய அளவுக்கு ஒரு கிரைம் டிராமா படமாக உள்ளது. இரண்டு பாதியிலும் நல்ல காட்சிகள் உள்ளன. ஆனால் சீரற்ற வேகத்தில் செல்லும் இப்படம் மிகவும் நீளமானதாக உள்ளது. தனுஷ் தன்னுடைய கெரியர் பெஸ்ட் நடிப்பை கொடுத்துள்ளார். அற்புதமாக நடித்துள்ளார். படத்தில் சுவாரஸ்யமான கதைக்களமும் சில நல்ல காட்சிகளும் உள்ளன. எப்போதும் போல இயக்குனர் சேகர் கம்முலா ஆரம்பத்தில் இருந்தே கதையோடு ஒன்ற வைக்கிறார். இருந்தாலும் தொய்வான எடிட்டிங், படத்தின் ரன் டைம், திடீரென வரும் ப்ரீ கிளைமாக்ஸ் ஆகியவை அதற்கு பின்னடைவாக அமைந்துள்ளன.
இன்னும் விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாகர்ஜுனாவும் நன்றாக நடித்துள்ளார். ராஷ்மிகா அந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். டிஎஸ்பியின் இசை நன்றாக ஒர்க் ஆகி உள்ளது. படத்தை தாங்கி செல்ல உதவி இருக்கிறது. புரொடக்ஷன் வேல்யூ அருமை. சேகர் கம்முலாவின் முந்தைய படங்கள் போல இது எமோஷனலாக டச் ஆகாவிட்டாலும் தனித்துவமான காட்சிப்படுத்துதல் மற்றும் சில நல்ல தருணங்களுக்காக இப்படத்தை பார்க்கலாம் என பதிவிட்டுள்ளார்.
குபேரா சேகர் கம்முலாவின் மேஜிக். கட்டாயம் பார்க்க வேண்டிய படம். தனுஷ் வேறலெவலில் நடித்திருக்கிறார். தேசிய விருது பெர்பார்மன்ஸ் இது. நாகர்ஜுனாவின் ஸ்கிரீன் பிரசன்ஸூம் வெறித்தனமாக உள்ளது. குபேரா முதல் பாதி டீசண்ட் ஆகவும், இரண்டாம் பாதி வேறலெவலிலும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
குபேரா கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். தனுஷின் அவார்டு வின்னிங் பர்பார்மன்ஸ், நாகர்ஜுனாவின் தனித்துவமான கதாபாத்திரம், ராஷ்மிகாவின் சூப்பரான நடிப்பு, சேகர் கம்முலாவின் ரைட்டிங் மற்றும் டைரக்ஷன், தேவி ஸ்ரீ பிரசாத்தின் தெறிக்கவிடும் பின்னணி இசை, இரண்டாம் பாதி ஆகியவை படத்தின் பாசிடிவ் ஆக அமைந்துள்ளது. முதல் பாதி சற்று தொய்வை ஏற்படுத்துவது தான் நெகடிவ் ஆக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
குபேரா திரைப்படம் எல்லோருக்கும் பிடித்தமானதல்ல, ஆனால் நீங்கள் டிராமாக்களின் மீது ஆர்வமுள்ளவராக இருந்தால், அதற்குள் ஒரு வடிவத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு படத்தின் உச்சக்கட்டத்தை எதிர்கொள்வீர்கள். நிறைய அடுக்குகள், நிறைய சம்பவங்கள், எலியும், பூனையுமாக நிறைய தருணங்களுடன் கவர்ந்திழுக்கும். சமீப காலங்களில் நாகர்ஜுனாவிடமிருந்து வெளிவந்த சிறந்த நடிப்பு இது என்பதில் சந்தேகமில்லை. கொடூரமானது. எமோஷனலானது, தனுஷுக்கு இணையான ஒரு கதாபாத்திரம் என குறிப்பிட்டுள்ளார்.
குபேரா கொடுத்த காசுக்கு ஒர்த்தான படம். சேகர் கம்முலா ஒருபோதும் ஏமாற்றுவதில்லை. ஈர்க்கக்கூடிய, நகைச்சுவையான, மிகவும் நன்றாக எழுதப்பட்ட வசனங்கள், இசை மிகவும் சிறப்பாக உள்ளது. நிகித் பொம்மை தனது ஒளிப்பதிவில் உண்மையான இடங்களை மிஞ்சுகிறார். தனுஷை விட வேறு எந்த நடிகரும் இந்தப் பாத்திரத்தில் நடித்திருக்க முடியாது. சிறந்த விஷயம் என்னவென்றால், வில்லன் வேடத்தில் நாகர்ஜுனாவை நடிக்க வைத்தது தான். அவரது நடிப்பு அருமை. ராஷ்மிகா எப்போதும் போல அழகாக இருக்கிறார், அவரது எமோஷன் மற்றும் எக்ஸ்பிரசன்கள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. எமோஷன் மிகவும் நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. எனக்குப் பிடிக்காத ஒரே பகுதி என்றால் அது கிளைமாக்ஸ் தான், அது நிஜ வாழ்க்கையில் நடக்காது. போய்ப் பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.