தமிழில், ஆரியன் மற்றும் நிமிர்ந்து நில், போன்ற படங்களில் நடித்துள்ளவர் பிரபல இளம் நடிகை ராகினி திவேதி. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் அரசு மருத்துவர்கள், 150 பேருக்கு தன்னுடைய வீட்டிலேயே சமையல் செய்து கொடுத்து வருகிறார்.

தமிழில் ஓரிரு படங்களில் இவர் நடித்திருந்தாலும், கன்னடம் மொழியில் நிறைய படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஊரடங்கால் பாதிக்கபட்டவர்களுக்கு, மருத்துவ மனையில் சாப்பிட கூட நேரம் இல்லாமல் வேலை செய்து வரும், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் சுமார் 150 பேருக்கு தன்னால் முடிந்த ஒரு சிறு உதவி என கூறி, இந்த உதவிகளை இன்னும் சிலருடன் சேர்ந்து செய்து வருகிறார் ராகினி.
இது குறித்த புகைப்படங்களையும் அவர் தன்னுடைய இன்ஸ்டாங்கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பல நடிகைகள் வீட்டை விட்டு கூட வெளியே வராத நிலையில் நடிகை ராகினியின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.