விமர்சனம்: ஒரு பாட்டிலுக்குள் அடங்காத பெண்ணியம்... ஓவியா ஊற்றிய 90 எம்.எல்..!

By Thiraviaraj RM  |  First Published Mar 2, 2019, 7:49 PM IST

ஒருபடத்தில் என்னவெல்லாம் இருக்ககூடாதோ அவை அத்தனையும் இந்த 90எம்.எல் பாட்டிலுக்குள் மன்னிக்கவும் படத்திற்குள் அடங்கி இருக்கிறது. வாழ்க பெண்ணியம்..! 


ஓவியா தனது ஆண் நண்பர்களுடன் ஒரு அபார்ட்மெண்டில் லிவிங்க் டுகெதர் வாழக்கை வாழ்ந்து வருகிறார். அந்த அபார்ட்மெண்டில் வசிக்கும் நான்கு பெண்கள் ஓவியாக்கு தோழிகளாக வாய்க்கிறார்கள். ஒரு நாள் பார்ட்டிக்கு தயாராகிறார்கள். 

முதல் ரவுண்டில் பீர் சாப்பிடும் அவர்களில் ஒரு தோழி காதலன் தன்னை ஏமாற்றிவிட்டு சென்ற கதையை கூறுகிறார். அடுத்த ரவுண்டில் பிரியாணி, சரக்குடன் சங்கத்தை கூட்டுகிறார்கள். அப்போது ஒரு தோழி தனது கணவன் ரவுடியுடன் சுத்திக்கொண்டு தனது வாழ்க்கையை கெடுப்பதாக புலம்புகிறார். 3 வது ரவுண்டு குடியை விட்டு கஞ்சாவாக மாறுகிறது. அப்போது ஒடு தோழி தனது கணவர் தனது முன்னாள் காதலியை நினைத்து தன்னுடன் தாம்பத்தியம் வைத்துக் கொள்ள மறுப்பதாக சலம்புகிறார். 4வது பார்ட்டியில் மரணமட்டையாகிறார்கள். இந்த ரவுண்டில் தனது தோழிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்கிறார் ஓவியா. 

Latest Videos

undefined

100 முறையாவது இந்தப்படத்தில் உதட்டு முத்தல் அடித்திருக்கிறார் ஓவிய. சிம்புவுடன் உதட்டு முத்தத்துடன் தான் முடிகிறது படம். படம் முழுக்க வசனங்களில் இரட்டை அர்த்தங்கள். சென்சாரில் ஒரு ஏ சர்டிபிகேட் கொடுத்ததற்கு பதில் மூன்று ஏ சான்றிதழ் வழங்கினாலும் படம் தாக்குப்பிடிக்கும். 

மது, புகைப்பழக்கம் உடல்நலத்துக்கு கேடு என படம் ஆரம்பிக்கும் முன் எச்சரிக்கை வாசகம் வருகிறது. ஆனால், படம் முழுவதும் குடியும் சிகரெட்டும் இல்லாத ஒரு காட்சி கூட இல்லை. ஒரு படத்தில் என்னவெல்லாம் இருக்கக்கூடாதோ அத்தனையும் 90 எம்.எல். படத்தில் இருக்கிறது. ஒரு கதாநாயகி 4 தோழிகளை வைத்து கல்யாணம் எவ்வளவு சுமை என்பதை இந்தப்படத்தில் சொல்லி இருக்கிறார்கள். குடிமைக்கு அடிட் ஆகி விட்ட கேரக்டரில் கச்சிதமாக பொறுந்திப் போயிருக்கிறார் ஓவியா.

 

அரவிந்தன் ஒளிப்பதிவில் போதை நிரம்பி வழிகிறது. சிம்பு சிறப்புத் தோற்றத்தில் வருவதோடு இசையையும் மீட்டிருக்கிறார்.  பாடல்களும், பின்னணி இசையும் இரைச்சலை கூட்டுகிறது.  ஒருபடத்தில் என்னவெல்லாம் இருக்ககூடாதோ அவை அத்தனையும் இந்த 90எம்.எல் பாட்டிலுக்குள் மன்னிக்கவும் படத்திற்குள் அடங்கி இருக்கிறது. வாழ்க பெண்ணியம்..! 

click me!