ஒரு கட்டுமானத்திற்கு இந்த ஐந்து விஷயங்களும் இருந்தால்தான் அது “சூப்பர் ஸ்ட்ரக்சர்”…த்திற்கு இந்த ஐந்து விஷயங்களும் இருந்தால்தான் அது “சூப்பர் ஸ்ட்ரக்சர்”…

First Published Nov 6, 2017, 2:39 PM IST
Highlights
these are the important for building


 

ஒரு கட்டுமானத்தை ஆட்சி செய்யும் ஐந்து விஷயங்கள் எவை என்பதை அனைத்து கட்டுமான பொறியாளர்களும் அறிவார்கள். அவை தரைத்தளம், சுவர்கள், தூண்கள், பீம் எனப்படும் குறுக்கு விட்டங்கள், கூரை ஆகியனவாகும்.

இந்த ஐந்து அமைப்புகளும் ஒரு கட்டிடத்தின் ‘சூப்பர் ஸ்ட்ரக்சர்’ என்று அழைக்கப்படுகின்றன. ஏனென்றால் அவை அமைக்கப்படும் விதத்தைப் பொறுத்தே கட்டிடத்தின் உறுதியும், தரமும் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

ஒரு வீட்டின் கட்டுமான செலவில் மூன்றில் ஒரு பங்கை இவை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.  தனிப்பட்ட வீட்டின் கட்டுமானமோ, அடுக்குமாடி வகை கட்டுமானமோ அல்லது மற்ற எதுவாக இருந்தாலும் இந்த ஐந்து விஷயங்களையும் நாம் சரியாக திட்டமிட்டு வடிவமைப்பு செய்து கொள்ள வேண்டும்.

அவற்றை கட்டமைக்கும்போது நவீன தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்துவதன் மூலமாக செலவுகளும் குறையும். மேலும், கட்டிட வேலைகளையும் விரைவாக முடித்துக் கொள்ளலாம்.

அந்த ஐந்து அம்சங்களின் தொழில்நுட்பம்

தரை தளம்

வீட்டிற்கான தரை அமைப்பில் விலை உயர்ந்த மார்பிள், கிரானைட் மற்றும் டைல்ஸ் வகையறாக்களை பதிப்பதுதான் வழக்கம். அவை வீட்டிற்கு உயர்ந்த தோற்றத்தை ஏற்படுத்தி தருகின்றன. அதற்கு மாற்றாக தற்போது புதியதாக அறிமுகமாகியிருக்கும் தரை தள அமைப்புகளையும் பயன்படுத்தலாம்.

‘ரப்பர் கோட்டிங்’ முறையில் அமைக்கப்படும் தரைதளத்தை அமைப்பதால் செலவில் கணிசமான அளவு குறையும். அதேபோல ‘பாலியூரித்தீன்’ கோட்டிங் கொண்ட மரத்தாலான தரை தளமும் நல்ல தேர்வாக இருக்கும்.  செராமிக் டைல்ஸ் தரை அமைப்பும் பட்ஜெட்டுக்குள் அமைவதாக இருக்கும். இவை தவிர ‘வினைல் ஷீட்’ கொண்டும் தரை தளத்தை வடிவமைத்து கொள்ளலாம்.

சுவர்கள்

சுவர்களை ‘பிரிகேஸ்ட்’ எனப்படும் ‘வால் பேனல்கள்’ கொண்டு அமைப்பதால் பட்ஜெட் நிச்சயம் வெகுவாக குறையும். அதுதவிர, ‘இன்சுலேட்டடு கான்கிரீட் பார்ம் ஒர்க்’ முறையில் கான்கிரீட் கட்டுமான சுவரை அமைத்தால் சிமெண்டின் பயன்பாடு இல்லாமல் வேலை விரைவாக முடியும். உட்புற சுவர்களை ஜிப்சம் பேனல்களால் அமைத்தாலும் செலவுகள் குறிப்பிடத்தக்க அளவில் நிச்சயம் குறைந்து விடும்.

தூண்கள்

செவ்வகம், சதுரம், வட்டம், பலகோண அமைப்பு ஆகிய வடிவங்களில் கான்கிரீட்டால் தூண்கள் அமைப்பது வழக்கமாக உள்ளது. இதிலும் நவீன முறைகளை கையாண்டு செலவுகளை குறைக்கலாம்.

கான்கிரீட் கொண்டு செய்யப்பட்ட ரெடிமேடு தூண்கள் பலவிதமான
அளவுகளிலும், வடிவங்களிலும் கிடைக்கின்றன. வீடுகள் கட்டுமானத்தைவிடவும் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலக கட்டிட அமைப்புகளுக்கு அவை பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

விட்டங்கள்

வீட்டின் கூரையை தாங்கிப்பிடிக்கும் குறுக்கு விட்டங்களும் தற்போது ரெடிமேடாக (பிரீ ஸ்ட்ரெஸ்டு பீம்) கிடைக்கின்றன. அவற்றையும் கட்டிடங்களுக்கு பயன்படுத்தலாம். அதனால் செலவினங்கள் குறைவாக அமையும். இவ்வகை பீம்களில் கான்கிரீட் தவிரவும், ‘பாலியூரிதீன்’ பீம்கள், ‘பைபர் கான்கிரீட்’ பீம்களும் நடைமுறைக்கு வந்துள்ளன.

கூரைகள்

எல்லாவிதமான தட்பவெப்ப நிலைகளிலிருந்தும் ஒரு வீட்டை பாதுகாப்பது அதன் கூரை அமைப்புதான். மாடிகளுக்கான தரைதளங்களை கான்கிரீட்டால் அமைத்துவிட்டு, மேல் மாடியில் ஸ்டீல் ஷீட்டுகள் அல்லது ‘பைபர் கிளாஸ்’ பயன்படுத்தி கூரை அமைப்பது வழக்கம். மாடிகளுக்குள் வரும் தரை தளங்களையும் ‘பிரீ ஸ்ட்ரெஸ்டு ஹாலோ கோர்’ எனப்படும் ஸ்லாப் கொண்டு வேண்டிய அளவுகளில் அமைத்துக் கொள்ளலாம்

click me!