மனைகளை வாங்கு முன்பு இந்த விஷயங்களை மறக்காமல் கவனிக்க வேண்டும்...

 
Published : Oct 31, 2017, 02:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
மனைகளை வாங்கு முன்பு இந்த விஷயங்களை மறக்காமல் கவனிக்க வேண்டும்...

சுருக்கம்

Before buying things you should not forget about these things ...

1.. பிடித்தமான புறநகர்ப்பகுதியில் வீடு வாங்குவது என்று முடிவு எடுத்தவுடனே அந்த பகுதியில் எங்கெங்கு வீட்டு மனைகள் விற்பனைக்கு இருக்கின்றன என்று அறிந்துகொள்ள வேண்டும். காலம் தாமதிப்பதை இயன்றவரை தவிர்க்க வேண்டும். விற்பனைக்கு உள்ள வீட்டுமனைகளை நேரில் சென்று பார்க்கவேண்டும்.

2.. விற்பனையாளர்கள் அழைத்துச் சென்று காண்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது. மனை வாங்க விரும்புபவர்கள் தாங்களாகவே நேரில் சென்று இடத்தைப் பார்க்கவேண்டும். அப்போதுதான் வீட்டு மனைகள் அமைந்துள்ள இடத்திற்கு என்னென்ன போக்குவரத்து வசதிகள் உள்ளன, அங்கு சென்று வருவதற்கு எவ்வளவு நேரமாகும் என்று தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.

3.. குறிப்பிட்ட பகுதியில் வீட்டுமனைகளை வாங்கலாம் என்று முடிவு எடுத்துவிட்டபிறகு உடனே விற்பனையாளர்களை அணுகி உரிய ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும். அதன்பிறகு விலை விவரங்களைப் பேசி முன்பணம் கொடுத்து, ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். வீட்டு மனைகள் இன்னும் முழுதாக விற்கவில்லை, எனவே அவசரப்பட வேண்டாம் என்று காலத்தைத் தள்ளிப்போட வேண்டாம். இதனால் சில வசதிகளை இழப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

3.. முக்கியமாக, பிரதான சாலைகளை ஒட்டி அமைந்திருக்கும் வீட்டு மனைகள் உடனடியாக விற்றுவிடும். எதிர்வரும் காலத்தில் சாலைகளை ஒட்டி அமைந்திருக்கும் வீடுகளே விரைவில் விலைமதிப்பு அதிகரிக்கும். எனவே அந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது. எதிர்காலத்தில் வீட்டை ஒட்டி கடைகளை கட்டும் திட்டம் இருந்தால் பிரதான சாலைகளை ஒட்டிய மனைகளை வாங்குவது பயன் உள்ளதாக இருக்கும்.

4.. திசைகளைப் பார்த்து வீடு வாங்குவதற்கான வாய்ப்பு குறையும். வீட்டின் வாசல் இருக்கும் திசையின் அடிப்படையிலேயே சூரிய வெளிச்சம், காற்றோட்டம் ஆகியவை அமையும். எனவே திசைகளைப் பார்த்து வீட்டு மனை வாங்க வேண்டும் என்றால் முன்கூட்டி வாங்குவதே சிறந்தது.  மனை வாங்கும்முன் கவனத்தில் கொள்ளவேண்டியவை

5.. வீட்டு மனைகள் அனைத்தும் ஒரே மாதிரி செவ்வக வடிவத்திலேயே பிரிக்கப்படுவதில்லை. வீட்டு மனைகளைப் பிரித்தபிறகு மிச்சமிருக்கும் நிலப்பரப்பை சாய்சதுரம், முக்கோணம் என்று அது இருக்கும் வடிவத்திலேயே வீட்டு மனையாக்கிவிடுவார்கள். வீட்டு வடிவமைப்புக்கு செவ்வக வடிவ மனையே சிறந்தது. மற்ற வடிவங்கள் அனைத்தும் அதற்கு அடுத்த நிலையில்தான் கருதப்படுகின்றன.

6.. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வீட்டு மனைகள் நன்றாக விற்கின்றன என்று தெரிய வந்தால் விற்பனைக்கு இருக்கும் மனைகளின் விலையை உயர்த்திவிடுவார்கள். எனவே தொடக்க விலையைக் காட்டிலும் கூடுதலான விலையில் மனையை வாங்க வேண்டியிருக்கும். மனை வாங்குவதற்கு முந்திக்கொண்டால் ஓரளவு ஆதாயம் பெறலாம்.

7.. வீட்டு மனையை வாங்கும்போது காலம் தாமதிக்காமல் சரியான நேரத்தில் அதைச் செய்தால் சில வசதிகளைப் பெற முடியும். அந்த வசதிகளை காலம் தாமதித்து இழக்க வேண்டாம்.

PREV
click me!