ரஜினியை விமர்சிக்க தகுதி இருக்கா?... சூப்பர் ஸ்டாரை ட்ரோல் செய்பவர்களுக்கு இளம் எழுத்தாளரின் ‘சுளீர்’ பதிலடி!

By Kanimozhi PannerselvamFirst Published Dec 23, 2020, 11:15 AM IST
Highlights

இப்ப எல்லாம் எதுக்கு எடுத்தாலும் விமர்சிக்கிறார்கள். ட்ரால் செய்வதற்கும் ஒரு எல்லை இருக்கு. ஒருவரை விமர்சிக்கும் முன்பு நம்ம எப்படி இருக்கோம் என்பதை முதலில் சிந்தித்து பார்க்கனும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கட்சி ஆரம்பிக்கும் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதை விட சோசியல் மீடியாவில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. டிசம்பர் 31ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக ரஜினி அறிவித்ததில் இருந்தே சட்டமன்ற தேர்தல் பரபரப்பு சற்றே கூடிவிட்டது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்பவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் இளம் எழுத்தாளர் அஸ்வின். தனது யூ-டியூப் சேனலான டேக் 1 டேக் 2 டேக் 3-ல் பேசியிருப்பது யாரையும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என நினைக்கும் நெட்டிசன்களுக்கு சுளீர் பதிலடியாக அமைந்துள்ளது. 

 

 

ரஜினி சார் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து, ரசிகர்கள் கருத்து என பார்த்தோமேயானால் 1996 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவாரா?,  மாட்டாரா? என்ற ஒரு கேள்வி மக்கள் மனதில் இருந்து கொண்டிருந்தது. 1996ல் ரஜினிக்கு ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு பலம் இருந்தது. நாளடைவில் பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்து ஆரம்பித்தனர். தற்போது சோசியல் மீடியா வந்ததற்கு அப்புறம் பொதுமக்கள் அதிக அளவில் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அதில் சில கருத்துக்கள் பாசிட்டிவாக இருந்தாலும், அவரை சுற்றி வரும் பல கருத்துக்கள் நெகட்டிவாக தான் இருக்கிறது. 

 

இப்ப நம்ம ரஜினி சார் நடிகர் என்பதையே மறந்துவிட்டோம். அரசியல் என்கிற ஒரு விஷயத்தை மட்டும் வச்சி நாம் ஏன் அவரை ட்ரோல் செய்ய வேண்டும்? அவர் அடிமட்டத்திலிருந்து எவ்வித சினிமா பேக்கிரவுண்டும் இல்லாமல் வந்து ஜெயித்த கடின உழைப்பாளி. ஒருவர் மேல் இருக்கும் அன்பு மற்றொருவர் மீது வெறுப்பாக மாறக்கூடாது. ரஜினிக்காக மட்டும் சொல்லவில்லை. இதை பொதுவாழ்க்கையில் கடைபிடிப்பது நல்லது. 

போர் வரும் போது வருவேன்னு சொன்னார், பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பதாக கூறியுள்ளார். ஜனவரியில் கட்சியை தொடங்க போவதாகவும் அவர் கூறியிருக்கிறார். விஜயகாந்த் ஒரு நடிகராக இருந்து தான் அரசியலுக்கு வந்தார். அதேபோல் ஜெயலலிதா மேடமும் ஒரு நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்தவர் தான். அதேபோல் ரஜினி அரசியலுக்கு வருகிறார், வரவில்லை என்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதை நாம் ஏன் ட்ரோல் செய்ய வேண்டும்?. 

 

கருத்து சுதந்திரம் என்பது ஆரம்பத்தில் இருந்தே இருக்கு... யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம். ஆனால் நீங்கள் அதை எப்படி சொல்லுறீங்க என்பது முக்கியம். ஒருவரை விமர்சிக்கும் முன்னால் நமக்கு அந்த தகுதி இருக்கா? என்பதை பார்க்க வேண்டும். ஒரு குவாலிட்டி என்பது இருக்கு இல்லையா?. நமக்கான பகுத்தறிவை சரியாக பயன்படுத்த வேண்டும். அரசியல் என்கிற ஒரு காரணத்திற்காக மட்டுமே ரஜினியை ட்ரால் செய்கிறார்கள். ஒரு பிராண்டை உருவாக்குவது என்பது மிகவும் கஷ்டமான விஷயம். ஆனால் அவர்‘சூப்பர் ஸ்டார்’ என்ற பிராண்டை கஷ்டப்பட்டு உருவாக்கி இருக்கார். எனவே அவரோட முடிவையும், கருத்துக்களையும் விமர்சிப்பதில் தப்பு கிடையாது. ஆனால் அதை நாகரீகமான முறையில் விமர்சிக்க வேண்டும். 

 

இப்ப எல்லாம் எதுக்கு எடுத்தாலும் விமர்சிக்கிறார்கள். ட்ரோல் செய்வதற்கும் ஒரு எல்லை இருக்கு. ஒருவரை விமர்சிக்கும் முன்பு நம்ம எப்படி இருக்கோம் என்பதை முதலில் சிந்தித்து பார்க்கனும். நான் ரஜினியை புகழ்ந்து பேசுவதற்காக இந்த வீடியோவை போடவில்லை. நடுநிலையோடுதான் செய்கிறேன். சார் இது உங்களுக்கு பிளஸ், இது உங்களுக்கு மைனஸ் என எடுத்து சொல்லலாம். ஆனால் அதை நம்ம ட்ரோல் பண்ணக்கூடாது. இன்னார் தான் அரசியலுக்கு வரனும், இன்னார் வரக்கூடாது என்பது எல்லாம் இல்ல. மக்களுக்கு சேவை செய்யக்கூடிய மனசு இருக்குற யார் வேண்டுமானாலும் வரலாமே. இந்த சுதந்திர பூமியில் பிறக்குற எல்லா உயிருமே ஏதாவது ஒரு சாதனையை நோக்கி செல்ல தான் போகிறது.

அப்படியிருக்க,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் எப்படி இருக்குன்னு பார்க்கலாமே. மாற்றம் வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். இளைஞர்கள் கூட்டம் அரசியலுக்கு வர வேண்டும் என நினைக்கிறோம். இந்த நேரத்தில் ரஜினி அரசியலுக்கு வருவது எப்படி இருக்கும் என பார்க்கலாமே? என ட்ரால் செய்யும் நெட்டிசன்களுக்கு நச்சென குட்டு வைத்திருக்கிறார் அஸ்வின். 
 

click me!