ரஜினிக்காக தயாராகும் குட்டி விமானம்... ஜெயலலிதா பாணியில் பிரச்சாரம்..!

Published : Dec 23, 2020, 10:53 AM IST
ரஜினிக்காக தயாராகும் குட்டி விமானம்... ஜெயலலிதா பாணியில் பிரச்சாரம்..!

சுருக்கம்

சட்டசபை தேர்தலுக்கு, பறந்து பறந்து பிரசாரம் செய்ய முடிவு செய்திருக்கிறார் வரும் 31ம் தேதி கட்சியை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ள ரஜினிகாந்த். 

சட்டசபை தேர்தலுக்கு, பறந்து பறந்து பிரசாரம் செய்ய முடிவு செய்திருக்கிறார் வரும் 31ம் தேதி கட்சியை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ள ரஜினிகாந்த். அடுத்த மாசம் கட்சியைத் துவக்கி, உடனே சட்டசபை தேர்தல் பிரசாரத்து இறங்க போகிறார். மண்டல வாரியாக, நேரடி பிரசாரம் செய்ய திட்டமிட்டிருக்கிறார். காரில் செல்வது, அவரது உடல் நிலைக்கு சரியாக வராது என்பதால், குட்டி விமானத்தில் பறந்து, பிரசாரம் செய்ய முடிவெடுத்துள்ளார். 

ரஜினியின் உறவினர் ஒருவர், இதற்காகவே சொந்தமாக விமானம் வாங்க இருக்கிறாராம். இந்த விமானத்தில், எட்டு பேர் வரை பயணம் செய்யலாம். குட்டி விமானத்தில் பறந்து போய், ஒரே மேடையில், மாவட்ட வாரியாக வேட்பாளர்களை நிற்க வைத்து, பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறாராம். இது, ஜெயலலிதா பாணியில் இருப்பதாக விஷயமறிந்தவர்கள் கூறுகிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை... கடைசியில் மண்டியிட்ட வங்கதேசம்..!
ஹமாஸை ஒழிப்பதில் நாங்களே தலைமை தாங்குவோம்.. அமெரிக்காவிடம் அடம்பிடிக்கும் பாகிஸ்தான் இராணுவம்..!