Breaking ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி... எடப்பாடி பழனிசாமி அதிரடி சரவெடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Dec 23, 2020, 10:36 AM IST
Highlights

தமிழகத்தில் 2021ல் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. 300 மாடுபிடி வீரர்கள், 50 சதவீத பார்ளையாளர்களுடன் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 2021ல் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. 300 மாடுபிடி வீரர்கள், 50 சதவீத பார்ளையாளர்களுடன் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்: நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, 2017 முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தொற்று காரணமாக, 2021-ம் ஆண்டில் நிகழ்ச்சி நடத்த சில கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது.

* ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த வேண்டும்.

* எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த வேண்டும்.

* இந்த நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவிற்கு ஏற்ப, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.

* ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.

* பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது.

* இதற்கான விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!