போலீசை எட்டி உதைத்து, சட்டையை பிடித்து உலுக்கி இளம் பெண் அட்ராசிட்டி.. நடு ரோட்டில் போதையில் அசிங்கம்.

Published : Jun 21, 2022, 07:27 PM IST
 போலீசை எட்டி உதைத்து, சட்டையை பிடித்து உலுக்கி இளம் பெண் அட்ராசிட்டி.. நடு ரோட்டில் போதையில் அசிங்கம்.

சுருக்கம்

மதுபோதையில் இளம்பெண் ஒருவர் போலீஸின் சட்டையை பிடித்து எட்டி உதைத்து தாக்கி அவமானப்படுத்தும் சம்பவம் நடந்துள்ளது. இதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

மதுபோதையில் இளம்பெண் ஒருவர் போலீஸின் சட்டையை பிடித்து எட்டி உதைத்து தாக்கி அவமானப்படுத்தும் சம்பவம் நடந்துள்ளது. இதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இளைஞர்கள், இளம்பெண்கள்  மது பழக்கத்திற்கு அடிமையாகும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் போதை தலைக்கு ஏறும் போது சிலர் பொது இடமென்றும் பாராமல் செய்யும் அட்ராசிட்டி  செய்வதை ஆங்காங்கே பார்க்க முடிகிறது. ஒரு சிலர் மதுபோதையில் விபத்துக்கு ஆளாகும் அவலங்களும் அரங்கேறி வருகிறது.

சிலர் எதிரில் யார் இருந்தாலும் அவர்களை தாக்குவது, அவமானப்படுத்துவது போன்ற சம்பவங்களும் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுபோன்ற ஒரு சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. மும்பையில் இரவு பார்ட்டியில் கலந்து விட்டு  மது போதையில் பெண் ஒருவர் வாகனம் ஓட்டி வந்தார்.

அப்போது அங்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர், வாகனத்தில்  இருந்து இறங்கிய அந்த பெண் அங்கிருந்த காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்தப் பெண் மது போதையில் இருந்ததால் அந்தப் பெண்ணை போலீசார் தவிர்க்க  முயற்சித்தனர், ஆனால் விடாப்பிடியாக அந்த பெண் அங்கிருந்த எல்லோரையும் கடுமையான வார்த்தைகளால் திட்டினார். பின்னர் போலீசார் அந்த பெண்ணை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்ப முயற்சித்தனர்.

ஆனால் அந்த பெண் போலீஸ் அதிகாரியின் சட்டையை பிடித்து எனக்கு அறிவுரை கூற நீ யார்? என கூறி போலீசை தாக்க முயற்சித்தார். பின்னர் காவலரை காலால் எட்டி உதைத்தார், அந்த பெண் மதைபோதையில் இருந்ததால் காவலர் அதையும் பொறுத்துக் கொண்டு அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயற்சித்தார். அப்போதும் நிற்காமல் அந்தப் பெண் அந்த போலீஸ் அதிகாரி அணிந்திருந்த முதல் கவசத்தை கழற்றினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை சுற்றியிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, அந்தப் பெண்ணின் அட்ராசிட்டி அதிகரிக்கவே அப்பகுதி மக்கள் அந்தப் பெண்ணுக்கு அறிவுரை கூறினர், ஆனால் அவர் யார் சொல்லியும் கேட்கவில்லை, பின்னர் அந்த   பொது இடத்தில் காவல்துறை என்றும் பாராமல் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட அந்தப் பெண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல அலிகார் மாவட்டத்தில் உள்ள கிஷன்பூரில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தயானந்த் சிங்க் அத்ரி என்பவர் தனது மனைவி மஞ்சுவுடன் இரவு ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார், அப்போது மழை பெய்ததால் அவர்கள் ஒதுங்கினர். சிறிது நேரம் மழை நின்றதால் அவர்கள் தங்கள் வீட்டுக்கு சென்றனர்.

அப்போது நடு ரோட்டில் சாக்கடை பள்ளம் மழை நீர் நிரம்பியிருந்தது, இதை தயானந்த் சிங் அத்ரி கவனிக்கவில்லை, அவர் வேகமாக ஸ்கூட்டி ஓட்டி வந்த நிலையில் தம்பதியினர், ஸ்கூட்டியுடன் பாதாள சாக்கடையில் கவிழ்ந்தனர். இதை பார்த்த அங்கிருந்த பாதசாரிகள் துரிதமாக செயல்பட்டு அவர்கள் இருவரையும் பாதாள சாக்கடை பள்ளத்தில் இருந்து வெளியில் தூக்கினர். தம்பதியர் இருவரும் தண்ணீரில் மூழ்கியதால் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
 

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!