சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் பரபரப்பு.. கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் பறிமுதல்.. இளம் பெண் கைது.

By Ezhilarasan BabuFirst Published Mar 25, 2021, 1:14 PM IST
Highlights

சென்னை பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து துபாய் செல்லும் சிறப்பு விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காஞ்சிபுரத்தை சோ்ந்த வசந்தா(32) என்ற இளம் பெண் பயணி டிராலி பேக்குடன், 

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்தமுயன்ற ரூ.18.25 லட்சம் மதிப்பு டைய வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதில் காஞ்சிபுரத்தை சோ்ந்த பெண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தென்னிந்திய விமான நிலையங்களில் பிரமாண்டமானதும், விமான போக்குவரத்தின் மையப்புள்ளியாகவும் இருந்த வருகிறது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம். இங்கு நாளொன்றுக்கு லட்சக்கணக்கில் பயணிகள் வந்து செல்கின்றனர். அதேபோல் பல்வேறு வெளியாடிகளில் இருந்து தங்கம், வைரம், மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் கடத்தல் சம்பவங்களில் நடைபெற்று அதில் கைது சம்பவங்களும் தொடர்கதையாக வருகிறது. 

 

அந்த வரிசையில்,  நேற்று சென்னை   பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்தமுயன்ற ரூ.18.25 லட்சம் மதிப்பு டைய வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து துபாய் செல்லும் சிறப்பு விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காஞ்சிபுரத்தை சோ்ந்த வசந்தா(32) என்ற இளம் பெண் பயணி டிராலி பேக்குடன், விமானத்தில் பயணிக்க வந்தாா். சுங்கத்துறை அதிகாரிகளுக்கு டிராலி பேக் மீது சந்தேகம் ஏற்பட்டது. 

இதையடுத்து பெண் பயணியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அவருடைய டிராலி பேக்கில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலா், குவைத் தினாா் ஆகிய வெளிநாட்டு பணம் மறைத்து வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவற்றை பறிமுதல் செய்தனா். இதில் ரூ.18.25 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து பெண் பயணி வசந்தாவின் பயணத்தையும் ரத்து செய்தனா். மேலும் அவரை கைது செய்து அந்த படம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

click me!