யோகி முதல்வர் ஆவது உறுதி.. எத்தனை தொகுதி என்பதே மில்லியன் டாலர் கேள்வி..! கொளுத்தும் கோலாகல சீனிவாசன்.

By Ezhilarasan BabuFirst Published Jan 18, 2022, 11:54 AM IST
Highlights

இதில் ஒரு கருத்துக் கணிப்பு கூட அகிலேஷ் ஆட்சி அமைப்பார் என்று கூறவில்லை, அத்தனை கருத்துக் கணிப்புகளும் ஆட்சியை பாஜக கைப்பற்றும் என்று உறுதி செய்துள்ளன. ஆக எவ்வளவு  எண்ணிக்கையில் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இதேபோல கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான கருத்துக் கணிப்பில் சமாஜ்வாடி பார்ட்டிக்கு 60 முதல் 70 வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் வெற்றி பெறுவது உறுதி என்றும், அவர் மீண்டும் முதலமைச்சர் ஆவது உறுதியாகிவிட்டது என்றும், ஆனால் எத்தனை தொகுதிகளை அவர் கைப்பற்ற போகிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி ஏன்றும் மூத்த பத்திரிகையாளர் கோலாகல சீனிவாசன் கூறியுள்ளார். இந்தத் தேர்தலில் பாஜக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என நான்கு முனை போட்டிகள் இருந்தாலும், காங்கிரஸ் ரேஸில் இல்லவே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் கொடுத்துள்ள பேட்டியின் விவரம் பின்வருமாறு:-

உத்திரப் பிரதேசம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் 80 லோக்சபா தொகுதிகளை கொண்டுள்ளது. 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இப்படிப்பட்ட பிரம்மாண்டமான ஒரு மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதியில் இருந்து மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றே உத்தரப் பிரதேசத்தை ஆளப்போவது யோகி ஆதித்யநாத்தா அல்லது அகிலேஷ் யாதவா என்பது தெரியவரும். மிகவும் பரபரப்பான கட்டத்தை நோக்கி உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து வருகிறது. பம்பரமாக சுழன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆதித்யநாத் போன்றோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு புறம் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் அகிலேஷ் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். யோகியை வீழ்த்த விதவிதமான உத்திகளையும் அவர் கையாண்டு வருகிறார். இவர்களை தவிர களத்தில் பகுஜன் சமாஜ் மாயாவதி மற்றும் காங்கிரஸ் பிரியங்கா காந்தி ஆகியோரும் உள்ளனர்.

உ.பி தேர்தலை நிர்ணயிக்கப்போவது யார்.?? 

உத்தர பிரதேச மாநில தேர்தலை பற்றி பேசுவதற்கு முன் அந்த மாநிலத்தின் demography அதாவது தேர்தலை யார் நிர்ணயிக்க போகிறார்கள் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்வது அவசியம். உத்திரப்பிரதேச மாநில மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்டோர் 44%  உள்ளனர். அதில் யாதவர்களுடைய எண்ணிக்கை 12 சதவீதம், பட்டியலின மக்கள் 20.8 சதவீதம், அதில் மாயாவதி சார்ந்திருக்கிற ஜாதவ் சமூகத்தின் எண்ணிக்கை மட்டும் 13%, இஸ்லாமியர்கள் 19.5 சதவீதம், அதற்கடுத்து முற்படுத்தப்பட்டோர் அதாவது பார்வர்டு கம்யூனிட்டி 14.2%, இந்த முற்படுத்தப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 10% பேர் பிராமணர்களாக உள்ளனர். இது தவிர்த்து பழங்குடியினர் எஸ்.டி வாக்கு 1 சதவீதத்தினர் உள்ளனர். மற்றவர்கள் எல்லாம் சேர்த்து 0. 9% உள்ளனர். இதுதான் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு அடிப்படை வாக்கு வங்கி கணக்கு, இதனடிப்படையில் அங்கு மொத்தம்  403 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் ஒரு கட்சி 202 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சியை பிடிக்க முடியும், தற்போதைய அங்கு அறிவிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை1,74 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட 15 கோடி மக்கள் வாக்காளர்களாக உள்ளனர். 

தேர்தல் களம் எப்படி இருக்கிறது...

அடிப்படையாக நான்கு முனை போட்டி நிலவுகிறது. பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மூன்று கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பாஜக,  அப்னோதல்,  நிஷாந்த் பார்ட்டி, நிஷாந்த் என்பது படகு ஓட்டுபவர்களின் சமூகத்திற்கான கட்சி ஆகும். இந்த 3 கட்சிகளும் ஒருபுறம் உள்ளன  மற்றொரு புறம் சமாஜ்வாடி தலைமையில் 6 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர மாயாவதி தனியாக போட்டியிடுகிறார், காங்கிரஸ் தனியாக களம் காண்கிறது, மாயாவதி மற்றும் காங்கிரசுடன் எவரும் கூட்டுச் சேர முன்வராததால் அக்கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இதேபோல சிவசேனா 403 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது, ஓவைசி 100 தொகுதிகளில் போட்டியிடுகிறார், மாயாவதியின் திரிணாமுல் காங்கிரஸ் 403 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. இதுதான் அங்கு தேர்தல்களமாக உள்ளது. 

கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கிறது..??

அதாவது உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேர்தலைப் பொறுத்தவரையில் முதல் கருத்து கணிப்பு கடந்த ஆண்டு மார்ச் 18ம் தேதி வெளியானது. ஏபிபி சி ஓட்டர்ஸ் கருத்துக் கணிப்பு வெளியானது, அதில் யோகி ஆதித்யநாத் கிட்டத்தட்ட 280 தொகுதிகள் முதல் 290 தொகுதிகள் வரை கைப்பற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல் சமீபத்திய கருத்துக் கணிப்பு இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி டைம்ஸ் நவ் வெளியிட்டது, அதில் 250 தொகுதிகள் வரை பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. எனவே இதில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் 202 தொகுதிகளை கைப்பற்றினால் ஒரு கட்சி ஆட்சியைக் கைப்பற்ற முடியும், கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 312  சீட் ஆகும், எனவே கடந்த ஆண்டு மார்ச் 18 இல்  வெளிவந்த கருத்து கணிப்பில் முதல் சமீபத்தில் ஜனவரி 1ஆம் தேதி வந்த கருத்துக்கணிப்பு வரையில் மொத்தம் 6 கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த 6 கருத்து கணிப்புகளுமே பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்றுதான் சொல்லியிருக்கின்றன. அதே நேரத்தில் எண்ணிக்கை ஒவ்வொரு கருத்துகணிப்புக்கும் வேறுபடுகிறது.

இதில் ஒரு கருத்துக் கணிப்பு கூட அகிலேஷ் ஆட்சி அமைப்பார் என்று கூறவில்லை, அத்தனை கருத்துக் கணிப்புகளும் ஆட்சியை பாஜக கைப்பற்றும் என்று உறுதி செய்துள்ளன. ஆக எவ்வளவு  எண்ணிக்கையில் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இதேபோல கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான கருத்துக் கணிப்பில் சமாஜ்வாடி பார்ட்டிக்கு 60 முதல் 70 வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஜனவரி 1ஆம் தேதி வெளியான டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பிலும் சமாஜ்வாடி  அகிலேஷ் யாதவுக்கு அனேகமாக 100 முதல் இருந்து 110 தொகுதிகள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் 6 கணிப்பில் ஐந்து கணிப்புகளில் அகிலேஷ் யாதவ் 100 என்ற எண்ணிக்கையை தாண்டுவார் என கூறியுள்ளன. எனவே பாஜக ஆட்சியை கைப்பற்றுவது உறுதி என்றும், அகிலேஷ் யாதவ் 100 முதல்120 இடங்களில் வெல்லக் கூடும் என்றும் நாம் புரிந்து கொள்ளலாம். இந்து சமயத்தில் சமீபத்தில் வெளியான ரிபப்ளிக் டிவி பாரத் இந்தி தொலைக்காட்சியில், அகிலேஷ் யாதவ் 301 தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என கூறியுள்ளது. எனவே உ.பியில் பாஜகவுக்கு ஆதரவாக களம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

click me!