பொது மக்களே எஜமானர்கள்… அமரவைத்து குறைகள் கேட்டு அசத்தும் ஆதித்யநாத்….

 
Published : Apr 06, 2017, 08:17 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
பொது மக்களே எஜமானர்கள்… அமரவைத்து குறைகள் கேட்டு அசத்தும் ஆதித்யநாத்….

சுருக்கம்

Yogi Adityanath

உத்தரபிரதேச முதலமைச்சராக பதவியேற்ற யோகி ஆதித்யநாத் தனது அதிரடி நடவடிக்கைளால் அம்மாநில மக்களிடையே பெரும் புகழ் பெற்று வருகிறார்.

அண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேச மாநில  சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக அசுர பலத்தில் வெற்றி பெற்றது.இதையடுத்து எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தீவிர ஆன்மீகவாதி, சாமியார் என கடும் சர்ச்சைக்கிடையே யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டாலும், அடுத்தடுத்த அவரது நடவடிக்கைகள் பொது மக்களிடையே அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சிறப்பு சட்டங்கள், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் போன்றவற்றை சுத்தமாக வைத்திருக்க புதிய நடவடிக்கைகள் என அடுத்தடுத்த அசத்தல்களை யோகி அரங்கேற்றி வருகிறார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உத்தரபிரதேச மாநில விவசாயிகளின் 36 ஆயிரம் கோடி ரூபாய் பயிர் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று முதலமைச்சர் ஆதித்யநாத் பொது மக்களின் குறைகள் கேட்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது குறைகளை மனுக்களாக எழுதி வந்த பொதுமக்களை அமர வைத்து அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க  உத்தரவிட்டார்.

பொது மக்களை சந்தித்து குறைகள் கேட்கும் இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு வாரமும் நடத்த ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்

தமிழகத்தில் ஒரு கவுன்சிலரை சந்திக்க வேண்டும் என்றால் கூட அப்பாயிண்மென்ட் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்போது, இப்படி ஒரு எளிமையான முதலமைச்சர் யார் இருக்கிறார்கள் என  அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்