தீபிகா படுகோனுக்கு என்னைப்போல ஒருத்தன் தேவை...!! கோக்குமாக்காக பேசிய யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 14, 2020, 5:35 PM IST
Highlights

இந்நிலையில் தீபிகா நடித்த சபாக் என்ற  திரைப்படத்தை அனைவரும் புறக்கணிக்க வேண்டுமென வலதுசாரி இயக்கங்கள் திபிகாவுக்கு எதிராக குரல் எழுப்பினார்.

நடிகை தீபிகா படுகோனேக்கு  என்னைப்போன்ற ஒரு ஆன்மீக குருவின் ஆலோசனை தேவைப்படுகிறது என பிரபல யோகா மாஸ்டர் ராம்தேவ் கூறியிருப்பது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது  டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்து நுழைந்த வன்முறை கும்பல்  ஒன்று அங்கிருந்த மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியது அதில் மாணவர் சங்கத் தலைவி மற்றும்  பேராசிரியர்கள்  சகமாணவர்கள் என 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் இத்தாக்குதலுக்கு ஏபிவிபி என்ற மாணவர் அமைப்பு தான் காரணமென குற்றம்சாட்டப்பட்டுள்ளது  . ஆனால் இடதுசாரி மாணவர்கள் தங்களை தாங்களே தாக்கிக் கொண்டு பழியை பாஜகமீது போடுகின்றனர் என்ன  அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் விடுதி மாணவர்களை தாக்கியது தங்கள் அமைப்புதான் என இந்து அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. தாக்குதலில்  காயமடைந்த மாணவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக அமைப்பினர்  மற்றும்  நடிகர்-நடிகைகள் ஆதரவு தெரிவித்துவருகின்றனர் தாக்குதலை கண்டித்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்  அதில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை நேரில் சந்தித்து   அவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இது பாஜக உள்ளிட்ட வலதுசாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்நிலையில் தீபிகா நடித்த சபாக் என்ற  திரைப்படத்தை அனைவரும் புறக்கணிக்க வேண்டுமென வலதுசாரி இயக்கங்கள் திபிகாவுக்கு எதிராக குரல் எழுப்பினார்.

இந்நிலையில் மத்திய பிரதேசம் இந்தூரில் பிரபல யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் ,  அதில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இன்னும் அரசியல்  ,  சமூகம் மற்றும் கலாச்சார பிரச்சினைகள் குறித்து நன்கு படிக்க வேண்டும் என்றார் . அனைத்துக்கும் மேலாக அவர் நம்முடைய நாட்டை பற்றி நன்கு புரிந்து கொள்ள வேண்டும் .  இவற்றில்  நல்ல தெளிந்த அறிவு பெற்ற பிறகே அவர் முடிவுகளை எடுக்க வேண்டும் .  தீபிகாபடுகோன் அவர்களுக்கு என்னை போன்ற நபர்களின் சரியான ஆலோசனை தேவைப்படுகிறது என்றார் .  அவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

click me!