புஹாஹாஹா... சீமானை குஷிபடுத்திய சிம்பு... போட்றா வெடியை..!

Published : Jan 14, 2020, 04:46 PM IST
புஹாஹாஹா... சீமானை குஷிபடுத்திய சிம்பு... போட்றா வெடியை..!

சுருக்கம்

வெங்காயமே முன் வந்து விலையை குறைத்துக் கொண்ட மாதிரி சிம்புவே முன் வந்து அழைத்தாலும் தயாரிப்பாளர் கிடைக்கணுமே?

ஒரு கதை இன்னும் எத்தனை படிகளில் ஏறி இறங்குமோ, அது அந்த சீமானுக்கே வெளிச்சம். விஜய்காக எழுதிய ‘பகலவன்’கதையை விதார்த் கிடைத்தால் கூட எடுத்துவிடுவார் போலிருக்கிறது சீமான்.

ஆனாலும், சம்பவம் சபை ஏறவில்லை. இப்போது‘அண்ணே... நான் ரெடிண்ணே’என்று ஆன் தி ஸ்பாட் வாக்குறுதி கொடுத்துள்ளாராம் சிம்பு. வெங்காயமே முன் வந்து விலையை குறைத்துக் கொண்ட மாதிரி சிம்புவே முன் வந்து அழைத்தாலும் தயாரிப்பாளர் கிடைக்கணுமே?

சமீபத்தில் ஹீரோ பட தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ராஜேஷை சந்தித்த சீமான், ‘சிம்பு ரெடி... நீங்க ரெடியா? சுட சுட ஒரு வெடி போடலாம்’என்று கேட்க, அவரும் அரை ஷட்டரை ஓப்பன் பண்ணியிருக்கிறாராம். மீதி ஓப்பனுக்கு சிம்புவின் செயல்பாடுகள்தான் கை கொடுக்கணும். பகலவன் உதிப்பாரா? காத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

PREV
click me!

Recommended Stories

அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!
தமிழ் நாட்டில் இருந்து வந்த புழு..! பூச்சி அண்ணாமலை எங்களை மிரட்டுவதா..? வெடிக்கும் சிவசேனா..!