
பா.ஜ.க 150 இடங்களுக்கு மேல் கைபற்றும் -எடியூரப்பா நம்பிக்கை
கர்நாடகா சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகிறது. மக்கள் அனைவரும் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். பிரதமர் மோடி அவர்களும் தேர்தல் ஜனநாயகத்தின் திருவிழா இளைஞர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 222 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜெயநகர், ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன
பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா இன்று காலையில் வீட்டில் பூஜைகள் செய்துவிட்டு சிமோகா தொகுதியில் உள்ள ஷிகாரிபுரா வாக்குச் சாவடியில் வாக்கைப் பதிவு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, கர்நாடகாவில் சித்தராமையா அரசு மீது மக்கள் விரக்தியடைந்துவிட்டனர். பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும். சட்டசபை தேர்தலில் பாஜக 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.