அடிதூள்.. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Jun 21, 2022, 4:07 PM IST
Highlights

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். சரத்பவார் தலைமையில் 17 எதிர்க்கட்சிகளின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். சரத்பவார் தலைமையில் 17 எதிர்க்கட்சிகளின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்தார்வர் ஆவார்.  பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

சரத்பவார், பரூக் அப்துல்லா, கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்த நிலையில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் , திமுக, திருணாமுல் காங்கிரஸ் இடதுசாரிகள் உள்ளிட்ட 17 கட்சிகள் அவரை வேட்பாளராக முன்னிறுத்துகிறது. 

எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக நிறுத்த அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஒப்புக்கொண்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக அறிவிக்க உள்ள வேட்பாளரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக ஹன்சிகா  களமிறக்கப்படுகிறார்.

நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு கட்சியில் இருந்து விலகியதாக பாஜகவில் இருந்து விலகினார் அவர்.  டெல்லியில் சரத்பவார் தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  ஐஏஎஸ் அதிகாரியான யஷ்வந்த் சின்ஹா  வெளியுறவுத் துறை மற்றும் நிதியமைச்சராக இருந்தவர் ஆவார்.

பாஜகவிலிருந்து யஷ்வந்த் சின்ஹா  2018 ஆம் ஆண்டு விலகினார். தேசிய நோக்கத்திற்காக திருணாமுல் காங்கிரஸ் இருந்து  விளக்குவதாக யுவன்ஷங்கர் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் எதிர் கட்சிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை திருணாமுல் காங்கிரசும் ஆதரித்துள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!