பிரதமரின் ஆயுளுக்காக அண்ணாமலை நடத்திய யாகம்.. தீயாய் பரவும் போட்டோ..

Published : Jan 07, 2022, 02:49 PM IST
பிரதமரின் ஆயுளுக்காக அண்ணாமலை நடத்திய யாகம்.. தீயாய் பரவும் போட்டோ..

சுருக்கம்

இந்நிலையில் பிரதமரின் பாதுகாப்புக்காக மகா மிருத்தியுஞ்சய மந்திரம் உச்சரிக்க போகிறேன் என்று ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். பிரதமரின் நீண்ட ஆயுள் மற்றும் பாதுகாப்பிற்காக பிரார்த்திக்கும்படி பொதுமக்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய பிரதேசத்திலுள்ள ஜோதிர்லிங்க மகாகாலேஸ்வரர் மற்றும் ஓம்காரேஷ்வரர் உள்ளிட்ட சிவ வழிபாட்டு தலங்களில் பிரதமரின் ஆயுளுக்காக பிராத்தனைகள் நடைபெற்று வருகிறது. 

பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக, அவரின் ஆயுள் விருத்திக்காக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் "மிருத்தியுஞ்சய யாகம்" நடைபெற்றது. பாஜக மதுரை  மண்டல பொறுப்பாளர் மருத்துவர் சரவணன் உள்ளிட்ட பலரும் அதில் கலந்து கொண்டனர். பஞ்சாப் சென்று அங்கு விவசாயிகள் போராட்டத்தின் காரணமாக டெல்லி திரும்பிய மோடி, தான் உயிருடன் தப்பி திரும்பியதாக கூறிய நிலையில் நாடு முழுவதிலும் பாஜகவினர் அவரின் ஆயுள் உறுதிபட வேண்டும் என்பதற்காக மிருத்தியுஞ்சய யாகம் செய்து வரும் நிலையில் அண்ணாமலையும் அந்த யாகத்தில் ஈடுபட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வகையில் அம்மாநிலத்தில் உள்ள பதிண்டாவுக்கு  விமானம் வாயிலாக சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இந்திய எல்லையோரம் உள்ள  உசைனிவாலா கிராமத்தில் அமைந்துள்ள தேசிய சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு, பின்னர் 42 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பெரோஸ்பூரில் துவக்கி வைக்க  பிரதமரின் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் திட்டமிட்டபடி  பிரதமர் பதிண்டா விமான நிலையம் வந்தடைந்தார். ஆனால் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்திலிருந்து உசைனிவாலா கிராமத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக செல்ல இயலாத நிலையில் சாலை வழியாக செல்ல முடிவு எடுக்கப்பட்டு, பஞ்சாப் மாநில காவல் துறைக்கு தலைமை இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டதாக தெரிவித்ததன் அடிப்படையில் பிரதமர் சாலை வழியாக பயணத்தை மேற்கொண்டுள்ளார். 

இந்நிலையில் உசைனி வாலாவுக்கு 30 கிலோமீட்டர் முன்பு அங்குள்ள பாலத்திற்கு அருகில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற காரணத்தைக் காட்டி பாரத பிரதமரின் வாகனங்கள் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் அங்கிருந்து பிரதமரின் வாகனங்கள் தொடர்ந்து செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வேறு வழியின்றி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு  பதிண்டா திரும்பினார் பிரதமர். டெல்லிக்கு புறப்படும் முன்பு நான் உயிருடன் வந்து சேர்ந்து விட்டேன் என் நன்றியை உங்கள் முதல்வருக்கு கூறுங்கள் என அங்கிருந்த அதிகாரிகளிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பலரும் பஞ்சாப் மாநில அரசை கண்டித்து வருவதுடன், பிரதமரின் ஆயுள் உறுதிபட, அவரின் பாதுகாப்புக்காக பல்வேறு வழபாடு, யாகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பாஜக மாநில முதலமைச்சர்கள் யாகம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமரின் பாதுகாப்புக்காக மகா மிருத்தியுஞ்சய மந்திரம் உச்சரிக்க போகிறேன் என்று ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். பிரதமரின் நீண்ட ஆயுள் மற்றும் பாதுகாப்பிற்காக பிரார்த்திக்கும்படி பொதுமக்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய பிரதேசத்திலுள்ள ஜோதிர்லிங்க மகாகாலேஸ்வரர் மற்றும் ஓம்காரேஷ்வரர் உள்ளிட்ட சிவ வழிபாட்டு தலங்களில் பிரதமரின் ஆயுளுக்காக பிராத்தனைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் பாஜக ஆதரவாளர்கள் சிவனுக்குரிய மகா மிருத்தியுஞ்சய யாகம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடியின்  நீண்ட ஆயுளுக்காக மிருத்தியுஞ்சய யாகம்  இன்று காலை நடைபெற்றது. அதில் மதுரை மண்டல பொறுப்பாளர் மருத்துவர் சரவணன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர். அதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!
முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்