அடக் கடவுளே.. தமிழகத்தில் 10 மடங்கு வேகமாக பரவும் எக்ஸ்-இ தொற்று பாதிப்பு ..?? மா.சு சென்ன பரபரப்பு தகவல்.

Published : Apr 07, 2022, 12:50 PM IST
அடக் கடவுளே.. தமிழகத்தில் 10 மடங்கு வேகமாக பரவும் எக்ஸ்-இ தொற்று பாதிப்பு ..?? மா.சு சென்ன பரபரப்பு தகவல்.

சுருக்கம்

தற்போது வரை தமிழகத்தில் புதிய வகை தொற்று எதுவும் இல்லை என்றும் தெரிவித்த அவர், ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலைகளிலும் பரிசோதனை செய்யப்பட்டும், சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார். 

தமிழகத்தில் எக்ஸ்-இ தொற்று பாதிப்பு இல்லை என்றும், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுமொத்த உலகையும் கொரோனா என்ற கொடிய வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் தற்போது தான் அந்த வகை வைரஸ் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் நோய்த் தொற்று கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. ஆனால்  சீனாவில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக அந்த நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

சீனாவில் புதிய வகை ஒமைக்ரான் எக்ஸ்-இ வகை வைரஸ் தோற்று அந்த நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்நிலையில் அந்த வகை வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி. உள்ளது ஒமைக்ரான் கொரோனா துணை திரிபாக எக்ஸ்-இ வகை மும்பையை சேர்ந்த ஒருவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சி இத்தகவலை தெரிவித்துள்ளதுடன் அந்த நபரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதாகவும் கூறியுள்ளது. இது ஒமைக்ரானை விட பத்து மடங்கு வேகமாக பரவக்கூடியது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால்  மீண்டும் கரோனா தொற்று கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார தினத்தையொட்டி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துமனையில் உணர்திறன் ஒருங்கிணைப்பு பூங்கா அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இந்து சமய துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போ செய்தியாளர் சந்தித்த மா. சுப்பிரமணியன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் லிப்ட் வசதியும், 3.5 லட்சம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது என்றார். சட்டப்பேரவையில் அறிவித்தபடி தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் 364. 22 கோடி மதிப்பில்  தீவிர சிகிச்சைப் பிரிவில் கூடுதல் படுக்கை வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். வரும் 14ஆம் தேதி அண்ணா நகரில் சித்த மருத்துவ பல்கலைக்கழக திறப்பு விழாவில் கலந்துகொண்டு முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளார் என்றார். அதேபோல் மும்பையில் ஒருவருக்கு எக்ஸ்-இ வகை தோற்று தாக்கம் இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ள நிலையில், அவருக்கு அந்த வகை தொற்று இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது என்பதே மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றார்.

தற்போது வரை தமிழகத்தில் புதிய வகை தொற்று எதுவும் இல்லை என்றும் தெரிவித்த அவர், ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலைகளிலும் பரிசோதனை செய்யப்பட்டும், சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார். கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த சில தினங்களாக ஒரு சில மாவட்டங்களில் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், இதனை கண்காணிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். குறிப்பாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர் தொடர்ந்து உறுதி செய்யப்படும் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார். 
 

PREV
click me!

Recommended Stories

TVK VIJAY: விஜய்க்கு முதலமைச்சர் பாதுகாப்பு வாபஸ்.! ஆளுநரின் உத்தரவால் மாறிய அரசியல் களம்!
Mamata Banerjee: ராஜினமா செய்ய மறுக்கும் மம்தா பானர்ஜி.! மேற்கு வங்கத்தில் அடுத்து நடக்கபோவது இதுதான்.! அதிரடி திருப்பங்கள்.!