தமிழில் நீட்  தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்... மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி... 

First Published Jul 10, 2018, 1:45 PM IST
Highlights
Write NEET exam in tamil students will be given 196 additional marks


அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழில் எழுதியவர்களுக்கு மொழி மாற்றம் செய்ததில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக மதிப்பெண் குறைத்து வழங்கப்பட்ட விவகாரத்தில் அவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள்  தமிழில் நீட் தேர்வு எழுதினர். ஆனல் அந்த வினாத்தாள்களை மொழிபெயர்ப்பு செய்ததில் நிறைய  குளறுபடிகள் இருந்ததால் தமிழில் நீட் எழுதியவர்களுக்கு மதிப்பெண்கள் குறைவாக கிடைத்தன. இதனால்  மருத்துவ சேர்க்கைகைக்கான  போட்டியில் தமிழக மாணவர்கள் மிகவும் பின் தங்கி இருந்தனர்.


இந்நிலையில் தமிழில் தவறாக வழங்கப்பட்ட வினாக்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில்  ரங்கராஜன்  எம்.பி. மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த சிபிஎஸ்சி  நீட் தேர்வு முறையாக நடத்தப்பட்டதாக  பதில் மனு தாக்கல் செய்தது.


ஆனால் இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழில் நீட் தேர்வு எழுதி மாணவர்களுக்கு ஒவ்வொரு  வினாவுக்கும்  கருணை மதிப்பெண்களாக 4 மார்க்குகள் வீதம்  49 வினாக்களுக்கு  196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என  உத்தரவிட்டது.


மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான  புதிய தரவரிசைப் பட்டியலை ஒரு வாரத்துக்குள் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிபதிகளின் இந்த அதிரடி தீர்ப்பால் CBSC  க்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அதே நேரத்தில் தமிழக மாணவர்களுக்கு இந்த கூடுதல் மதிப்பெண் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது

click me!