கண்ணீர் கடிதம் எழுதுவதா..? எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை..!

Published : Jun 08, 2020, 03:08 PM IST
கண்ணீர் கடிதம் எழுதுவதா..? எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை..!

சுருக்கம்

10ம் வகுப்பு தேர்வு நடத்துவதில் விடாப்பிடியாக நின்றால் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒப்புதல் பெற்று உங்களை களத்தில் சந்திப்போம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

10ம் வகுப்பு தேர்வு நடத்துவதில் விடாப்பிடியாக நின்றால் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒப்புதல் பெற்று உங்களை களத்தில் சந்திப்போம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்

.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’‘எதிர்க்கட்சி அஞ்சுகிறது’ என்றீர். ஆச்சர்யப்பட்டோம். ‘பணக்கார நோய்’ என்றீர். குழம்பினோம். ‘தனித்திரு-விழித்திரு-வீட்டிலிரு’என்றீர். இருந்தோம். ‘3 நாளில் காணாமல் போகும்’என்றீர். காத்திருந்தோம். இன்றோ, கைவிரிப்பது போல் கண்ணீர் கடிதம் எழுதினால் நாங்கள் என்ன செய்வது? 

பெற்றோர்-மாணவர்-ஆசிரியர்களின் நலனை கருத்தில்கொண்டு 10ம் வகுப்பு தேர்வை ரத்துசெய்யுங்கள். ‘நடத்தியே தீரவேண்டும்’என்றால் கொரோனா தீவிரம் குறைந்தபிறகு நடத்துங்கள். விடாப்பிடியாக நின்றால் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒப்புதல் பெற்று உங்களை களத்தில் சந்திப்போம்’’எனத் தெரிவித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு
இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!