ஒரே டுவிட்டரில் அமித்ஷாவை காலிசெய்த ராகுல்..!! எல்லை விவகாரத்தில் பங்கமாய் கலாய்த்து கிண்டல்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 8, 2020, 1:30 PM IST
Highlights

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் அதன் இறையாண்மையை அதன் எல்லைகளில் நீர்த்துப்போக செய்ய மோடி அரசாங்கம் அனுமதிக்காது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 

இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை வலுவானது என்றும், அதன் எல்லைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது நாட்டிற்கு தெரியும் என்றும், அமித்ஷா கூறியுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எல்லையில் நடக்கிற யதார்த்தம் என்ன என்று  அனைவருக்கும் தெரியும் என அமித்ஷாவை கிண்டல் செய்துள்ளார். இந்தியா-சீனா இடையே ஒருமாதத்திற்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த மே-5ஆம் தேதி பாங்கொங் த்சோ ஏரி பகுதியில் இருநாட்டு படைவீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  சுமார் 250க்கும் மேற்பட்ட வீரர்கள் இரும்புக் கம்பி, தடி போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர் அதில்  இரு தரப்பிலும் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், அதைத்தொடர்ந்து மே 9-ஆம்  தேதி சிக்கிம் ஒட்டியுள்ள நகுலா பாஸ் பகுதியில் இரு நாட்டைச் சேர்ந்த  ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு  உள்ளூர் மட்டத்திலான ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் பதற்றம் தணிந்தது. அதைத் தொடர்ந்தது மே 22-ஆம் தேதி கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய படையினர் சீன எல்லையில் ஊடுருவி விட்டதாக கூறி, சீனா ஏராளமான படைகளை குவிக்கத் தொடங்கியது.

அதற்கு  பதிலளிக்கும் வகையில்  இந்தியாவும் ஏராளமான ராணுவ வீரர்களையும், போர் தளவாடங்களையும் குவித்து சீனாவை கண்காணித்து வருகிறது, இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், அதை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கான நடவடிக்கையில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன. முன்னதாக இந்திய எல்லைக்குள் சீனப் படையினர் ஊடுருவிவிட்டதாக செய்திகள் வந்ததையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன, இது குறித்து கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி எல்லையில் சீன ராணுவத்தினர் ஊடுருவியது உண்மைதானா.? என்பதனை நாட்டு மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தார், இந்நிலையில் பீகார் மக்களிடையே வீடியோ கான்பரசிங் மூலம் பீகார் ஜான்சம்வத் பேரணியில் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நமது எல்லைக்குள் யார் வேண்டுமானாலும்  நுழைந்த ஒரு காலம் இருந்தது, டெல்லியில் இருந்த அரசு பாதிக்கப்படாமல் இருக்க நமது ராணுவ வீரர்களின் தலை துண்டிக்கப்பட்டது, மேலும்  உரி, புல்வாமா எங்கள் காலத்தில் நடந்தது. 

இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பிறகு அதன் எல்லைகளை பாதுகாக்க கூடிய வலிமைபொருந்திய நாடு இந்தியா என்பதை முழு உலகமும் ஒப்புக்கொள்கிறது. எனவே சீனாவுடனான பிரச்சனையை ராஜதந்திர ரீதியில் எவ்வாறு தீர்ப்பது என்பது  குறித்து இந்திய-சீன ராணுவ தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. அதுமட்டுமின்றி இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் அதன் இறையாண்மையை அதன் எல்லைகளில் நீர்த்துப்போக செய்ய மோடி அரசாங்கம் அனுமதிக்காது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்திய எல்லையை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என அவர்  கூறியிருந்தார். இந்நிலையில் அமித்ஷாவின் பேச்சை மேற்கோள்காட்டி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எல்லையில் என்ன நடக்கிறது என்பதன் யதார்த்தம் அனைவருக்கும் தெரியும், இருப்பினும் இதயத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க சிலர் இப்படி கூறலாம், இது அவர்களுக்கு நல்லதாக இருக்கலாம் என அமித்ஷாவின் பெயரை குறிப்பிடாமல் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
 

click me!