பெங்களூருவில் இருந்து வேகவேகமாக தமிழகம் திரும்பிய தொழிலாளர்கள்..!! காரணம் என்ன தெரியுமா...??

By Ezhilarasan BabuFirst Published Jul 14, 2020, 4:17 PM IST
Highlights

பெங்களூருவில் ஒரு வாரத்திற்கு முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலிருந்து பெங்களூரு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

பெங்களூருவில் ஒரு வாரத்திற்கு முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலிருந்து பெங்களூரு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இன்று இரவு முதல் ஒரு வாரத்திற்கு முழுஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் தமிழகத்திலிருந்து இபாஸ் அனுமதி பெற்று பெங்களூரு செல்வோரின் எண்ணிக்கை மாநில எல்லையில் குறைந்து காணப்பட்டது.  கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவி வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்த அம்மாநில அரசாங்கம் இன்று இரவு 8 மணி முதல் வரும் 22 ஆம் தேதி வரை அப்பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த உள்ளது. 

இதனால் பெங்களூருக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தொழில்நிறுவனங்கள், கட்டுமானம், கடைகள், ஆகியவற்றில் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேரந்த பணியாளர்கள், கூலித்தொழிலாளர்கள் அனைவரும் தமிழகத்திற்கு வேகவேகமாக திரும்பி வருகின்றனர். பெங்களுரு பகுதிகளில் அமல்படுத்தப்பட உள்ள முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்திலிருந்து பெங்களுரு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு இ-பாஸ் அனுமதியுடன் செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின்  எண்ணிக்கையும் வழக்கத்தை விட 75 சதவீதம் குறைந்துள்ளதாக மாநில எல்லையில் பணியாற்றும் அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். 

பெங்களூருவில் இன்று இரவு முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், இரயில் மற்றும் விமான பயணத்திற்கும் செல்லும் பொதுமக்கள், மருத்துவத்திற்கு செல்வோர் மாநில எல்லைகள் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். மேலும் தமிழகத்திலிருந்து கர்நாடகா மாநிலத்திற்கும் அதன் வழியாக மற்ற மாநிலத்திற்கும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் வழக்கம்போல செல்லலாம் எனக்கூறப்பட்டுள்ளது. அதேபோல தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து இ பாஸ் அனுமதி பெற்று கர்நாடகா மாநிலத்தை கடந்து அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பொதுமக்களும் கர்நாடா மாநில எல்லையை கடந்து செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!