ராகுலின் விமர்சனமும் பாஜகவின் பதிலடியும்..!

First Published Dec 23, 2017, 5:22 PM IST
Highlights
word war between rahul and bjp


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவை விமர்சித்ததற்கு, ராகுலை பாஜகவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்ட பின்னர், அவரது தலைமையில் முதன்முறையாக அக்கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, குஜராத் மாதிரி வளர்ச்சி என்பதே பொய்யானது. குஜராத் மக்களிடம் நான் பேசும்போது வளர்ச்சியே இல்லை என்று தெரிவித்தனர். பாஜகவின் அடித்தளமே பொய்யானது. 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உண்மை வெளியே வந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளை பாஜக திரித்துக் கூறியது என ராகுல் பேசினார்.

அதுமட்டுமல்லாமல், பாஜக பொய்யை மட்டுமே பேசுகிறது என்று விமர்சிக்கும் வகையில், பாஜகவுக்கு மட்டும் ஒரு சினிமா கம்பெனி இருந்திருந்தால் அதற்கு  ''லை ஹார்டு” என்றே பெயரிருந்திருக்கும் என டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக ராகுல் விமர்சித்திருந்தார். 

ராகுலின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜகவின் செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், ராகுல் காந்தி, இத்தகைய கீழ்த்தரமான அரசியல் பேச்சில் ஈடுபடும் அளவுக்குத்தான் நீங்கள் திறமையுள்ளவரா? அதிகாரத்தை எந்த வழியிலாவது கைப்பற்ற நீங்கள் இத்தகைய தரக்குறைவான விமர்சனங்களை முன்வைப்பீர்களா? நீங்கள் என்ன சொன்னாலும், உங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராது. மக்களுக்கு ஊழலின் முகம் உங்களுடையது என்று தெரியும் என்று பதிவிட்டுள்ளார்.
 

click me!