ஜெ. புகழுக்கு களங்கம் விளைவித்தால் நீதிமன்றத்தையே எதிர்ப்பேன்...! ஜெயிலுக்கு போக தயாரான புகழேந்தி...! 

 
Published : Dec 23, 2017, 03:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
 ஜெ. புகழுக்கு களங்கம் விளைவித்தால் நீதிமன்றத்தையே எதிர்ப்பேன்...! ஜெயிலுக்கு போக தயாரான புகழேந்தி...! 

சுருக்கம்

pugazhendhi ready to go to jail about contemp of court

ஜெயலலிதா மகள் என அம்ருதா ஆதாரமில்லாமல் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும்  அதற்கு ஏதுவாக நீதிமன்றம் செயல்பட்டால் அதை வண்மையாக கண்டிப்பேன் எனவும் இதனால் சிறைக்கு செல்லவும் தயங்க மாட்டேன் எனவும் கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அவர் மீது பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் வந்து கொண்டே இருக்கிறது. 

சில மாதங்களுக்கு முன்னர் நான்தான்  ஜெயலலிதா மகள் என்றும் சோமன்பாபுதான் அப்பா என்றும் கூறி பெண்மனி ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் அவர் கூறியது அனைத்தும் பொய் என கண்டறிந்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். 

இதைதொடர்ந்து  ஜெயலலிதாவுக்கும், நடிகர் சோபன் பாபுவுக்கும் பிறந்த மகன் நான் என கிருஷ்ணமூர்த்தி என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மேலும், ஜெயலலிதா தன்னை சிறு வயதில் தத்து கொடுத்து விட்டதாகவும் அதற்கான சாட்சி பத்திரத்தில் ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரும் கையழுத்து போட்டதாகவும் அவர் கூறினார்.

ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை அறிவித்து அவர் சொத்துக்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறிய கிருஷ்ணமூர்த்தி இதுதொடர்பாக சில ஆவணங்களின் நகலையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

பின்னர் இவை அனைத்தும் போலி என கண்டறிந்து சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வரிசையில் தற்போது அம்ருதா என்ற பெண் ஜெயலலிதா மகள் என கூறி வருகிறார். 

இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இதனால் உயர்நீதிமன்றமும் டி.என்.ஏ டெஸ்ட் ஏன் எடுக்க கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது. 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி, ஜெயலலிதா மகள் என அம்ருதா ஆதாரமில்லாமல் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும்  அதற்கு ஏதுவாக நீதிமன்றம் செயல்பட்டால் அதை வண்மையாக கண்டிப்பேன் எனவும் இதனால் சிறைக்கு செல்லவும் தயங்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். 

நீதிமன்றத்தின் கேள்வி மிகவும் வேதனையாக உள்ளது எனவும் நெஞ்சங்கள் தாங்கவில்லை எனவும் குறிப்பிட்டார். 
 

PREV
click me!

Recommended Stories

திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!
கழுத்தை நெறிக்கும் சிபிஐ..! டெல்லிக்கு வர விஜய்க்கு உத்தரவு..!