கீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா? மதுரை..!

By T BalamurukanFirst Published Jul 3, 2020, 10:31 PM IST
Highlights

இந்த நீளவடிவ பாசிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளன.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கீழடி அகழாய்வில் நீள வடிவ பச்சை வண்ண பாசிகள் கண்டெடுக்கப்பட்டன.

திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி  நடந்து வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.அவற்றில் செங்கல் கட்டுமானம், விலங்கு எலும்பு, மனித எலும்புகள், மண் பானைகள், ஓடுகள், சிறிய உலைகலன் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளது.

அகரத்தில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இங்கு நீள வடிவ பச்சை நிற பாசிகள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை கீழடி பகுதியில் நடந்த அகழாய்வுகளில் வட்ட மற்றும் உருண்டை வடிவ பாசிகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் முதன்முறையாக நீள வடிவ பாசிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நீளவடிவ பாசிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளன.மேலும் இந்த வகை பாசிகளை வியாபாரிகள், செல்வந்தர்கள் கழுத்தில் அணிந்துள்ளனர் என, தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.

click me!