50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி... உதயநிதி திமுக ஆட்சியில் என்ன பதவி தெரியுமா..?

By Thiraviaraj RMFirst Published May 2, 2021, 4:20 PM IST
Highlights

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
 

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலி 17,062 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த உதயநிதி ஸ்டாலின் வெற்றி அடைந்துள்ளார். தான் சந்தித்த முதல் சட்டப்பேரவை தேர்தலில் உதயநிதி வெற்றியை அறுவடை செய்துள்ளார். அதுவும் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார்.


 
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியைப் பொறுத்தவரை முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி தொடர்ந்து வெற்றிபெற்ற தொகுதியாகும். கடந்த 1996, 2001, 2006 ஆகிய தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடினார். வாரிசு அரசியல் விமர்சனத்துக்குள் சிக்கி முதன்முதலாக அரசியல் களம் காணும் உதயநிதிக்கு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியே சரியாக இருக்குமென சரியாக கணித்து களம் இறக்கியது திமுக. உதயநிதிக்கு எதிராக பாமக வேட்பாளரை களம் இறக்கியது அதிமுக.  உதயநிதிக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் என கணிக்கப்பட்ட நிலையில் அதனை உண்மையாக்கியுள்ளனர் அந்தத் தொகுதி மக்கள். 

திமுக ஆட்சி அமைக்க உள்ளதால் உதயநிதி ஸ்டாலின் உள்ளாட்சிதுறை அமைச்சராகவோ, துணை முதல்வராகவோ வாய்ப்புள்ளதாக திமுகவினர் கருதுகின்றனர். 

click me!