திடீரென அதிகரித்த வாக்குகள்... தலைகீழான ரிசல்ட் நிலவரம்..!

By Thiraviaraj RMFirst Published May 2, 2021, 3:50 PM IST
Highlights

காட்பாடி தொகுதியில் 17வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் துரை முருகன்  57 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். 

காட்பாடி தொகுதியில் 17வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் துரை முருகன்  57 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். காலையில் இருந்து அவர் பின்னடைவை சந்தித்து வந்தார். காலை முதல் முன்னிலையில் இருந்து வந்த தாராபுரம் தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்த பாஜக வேட்பாளர் எல்.முருகன் திடீரென பின்னடைவை சந்தித்துள்ளார்.

திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் 1,166 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை பெற்றுள்ளார். பாபநாசம் தொகுதியில் 15வது சுற்று முடிவில் ம.ம.க வேட்பாளர் ஜவாஹிருல்லா 12,466 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கோபிநாதனை விட முன்னிலை பெற்றுள்ளார். இவரும் தொடர்ந்து பின்னடவை சந்தித்து வந்தார்.

திமுக கூட்டணி 144 தொகுதிகளிலும் அதிமுக அணி  83 தொகுதிகளிலும் முன்னிலை சேப்பாக்கம் தொகுதி 16 வது சுற்று முடிவில் பாமக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் 40,198 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை ராயபுரம் தொகுதி 9வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் 9,370 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.ஆர். விஜயபாஸ்கர் 23280 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

click me!