#BREAKING திமுகவை முந்திக்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்... சற்று முன் வெளியான சூப்பர் அறிவிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published May 2, 2021, 3:05 PM IST
Highlights

திமுகவில் பல வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தாலும், அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. அதில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவியது. ஆனால் காலை வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே அதிமுக - திமுகவிற்கு இடையில் மட்டுமே போட்டி என்பது போல் நிலை தலைகீழாக மாறியது. 

அதற்கு ஏற்றார் போல் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 150 இடங்களிலும், அதிமுக 83 இடங்களிலும், மநீம ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. முதன் முறையாக வால்பாறை தொகுதியில் அதிமுக தன்னுடைய வெற்றியை பதிவு செய்துள்ளது. அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி 12,365 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளார். 

திமுகவில் பல வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தாலும், அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நாகை மாலி வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமகவின் வடிவேலு ராவணனை விட கூடுதலாக 16 ஆயிரத்து 985 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!