முதல் வெற்றி... பிள்ளையார் சுழிபோட்ட அதிமுக.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Published : May 02, 2021, 02:36 PM ISTUpdated : May 02, 2021, 02:39 PM IST
முதல் வெற்றி... பிள்ளையார் சுழிபோட்ட அதிமுக.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

சுருக்கம்

வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி 12365 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி 12365 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று  வருகிறது. திமுக அதிகபட்சமாக 118  தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திமுகவிற்கு அடுத்தபடியாக அதிமுக 80 தொகுதிகளில்  முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 12 தொகுதிகளிலும் , பாட்டாளி மக்கள் கட்சி 10 தொகுதிகளிலும், பா. ஜனதா தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 3 தொகுதிகளிலும், சிபிஐ, சிபிஐ எம் தலா 2 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம்  ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.

கூட்டணியாக பார்த்தால் திமுக கூட்டணி 137 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 94 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மநீம கூட்டணி ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி 12365 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தனித்தொகுதியான வால்பாறையில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமியை எதிர்த்து திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆறுமுகம் போட்டியிட்டார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!