Breaking News: முதல் வெற்றியை பதிவு செய்தது அதிமுக.. வால்பாறை அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி.

By Ezhilarasan BabuFirst Published May 2, 2021, 2:35 PM IST
Highlights

இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலுவான நிலையில் உள்ளன. அந்த வகையில், வால்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமுல் கந்தசாமி வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூருவமாக அறிவித்துள்ளது.  

வால்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றிபெற்றுள்ளார். இதன் மூலம் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள், தேர்தலில் போட்டியிட்டன. 

இன்று காலை 8 மணி முதல் அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டது முதலே தொடர்ந்து திமுக முன்னிலை வகித்து வருகிறது. தற்போது வரை திமுக கூட்டணி 152 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது, அதிமுக கூட்டணி 80 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலுவான நிலையில் உள்ளன. அந்த வகையில், வால்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமுல் கந்தசாமி வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூருவமாக அறிவித்துள்ளது. இதனால் அதிமுக இந்த சட்டமன்ற தேர்தலில் தனது முதல் வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது. அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி 12365 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட  இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஆறுமுகம் தோல்வியடைந்துள்ளார். 

தனித்தொகுதியான வால்பாறையில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமியை எதிர்த்து திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆறுமுகம் போட்டியிட்டார். இந்நிலையில் ஆறுமுகத்தை காட்டிலும் அமுல் கந்தசாமி 12365 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 
 

click me!