25 ஆண்டுகளுக்கு பிறகு விளாத்திகுளத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த திமுக.. மகிழ்ச்சியில் ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published May 2, 2021, 3:43 PM IST
Highlights

25 ஆண்டுகளுக்கு பிறகு விளாத்திகுளத்தில் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் சுமார் 38,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

25 ஆண்டுகளுக்கு பிறகு விளாத்திகுளத்தில் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் சுமார் 38,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகள் எண்ணப்பட்ட முதலே தொடர்ந்து திமுக முன்னிலை வகித்து வருகிறது. தற்போது வரை திமுக கூட்டணி 152 தொகுதிகளில் முன்னிலையிலும், அதிமுக கூட்டணி 80 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி தமிழகத்திலேயே  மூன்றாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மார்க்கண்டேயன் 73,261 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட சின்னப்பன் 40,309 வாக்குகளை மட்டுமே பெற்றார். இதன் மூலம்  திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் 37,893 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து 25 ஆண்டுகள் கழித்து திமுக விளாத்திகுளம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதேபோல், நீலகரி மாவட்டம் குன்னூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் 4,105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் 61,820 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் வினோத் 57, 715 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

click me!