ஆளுநர் கையெழுத்து இல்லனா தமிழக அரசின் ஒரு பில்லும் பாஸ் ஆகாது.. நாராயணன் திருப்பதி மிரட்டல் பேச்சு.

Published : Apr 15, 2022, 08:15 PM IST
ஆளுநர் கையெழுத்து இல்லனா தமிழக அரசின் ஒரு பில்லும் பாஸ் ஆகாது.. நாராயணன் திருப்பதி மிரட்டல் பேச்சு.

சுருக்கம்

ஆளுநர் கையெழுத்து போடவில்லை என்றால் தமிழக அரசின் எந்த ஒரு பில்லும் பாஸ் ஆகாது என பாஜா மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் கையெழுத்து போடவில்லை என்றால் தமிழக அரசின் எந்த ஒரு பில்லும் பாஸ் ஆகாது என பாஜா மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி  சென்னை தி. நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பாஜக கட்சி தொடங்கி 42 வருடம் முடிந்த நிலையில் நாடு முழுவதும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பஜாஜ பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

அதில் ஒரு பகுதியாக வரும் 19ம் தேதி  தேதி ஊட்டச்சத்து திட்டம் எனும் விழிப்புணர்வு நிகழ்வை தமிழகத்தில் பாஜக மகளிர் அணி மூலம் நடத்த இருக்கின்றனர் அதற்கான கூட்டம் இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, 42 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் உதித்தது பாஜக. 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை மக்கள் நல திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்லும் வகையில் கொண்டாடி வருகிறோம் என்று கூறினார்.

1999ம் ஆண்டு பலங்குடியினர் மேம்பாட்டுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. 367 உறைவிடப் பள்ளிகள் பலங்குடியினருக்காக உள்ளது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் 1000 பள்ளிகளாக உருவாக்கப்படும். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தான் வடகிழக்கு மாநிலங்கள் குறித்து சிந்திக்க தொடங்கினோம் எனக்கூறி அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் தான் பழங்குடியினருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த மக்களின் பொருளாதார முன்னேற்றதிகு பல்வேறு கடன்களையும் நாம் வழங்கி வருகிறோம்.

பழங்குடி மக்கள் என பொய் கூறி இந்த திட்டத்தினை பயன்படுத்தி வந்த 1 லட்சத்திற்கும் அதிகமான போலி பயனாளர்களை நீக்கி சரியான மக்களுக்கு இந்த திட்டத்தினை சென்று சேர்த்துள்ளோம் எனவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சத்துணவு திட்டத்திற்கு கொடுக்கப்படும் அனைத்து பொருட்களும் மத்திய அரசு தான் கொடுக்கிறது என்பது இங்கு யாருக்கும் தெரியாது எனவும் வரும் 19ம் தேதி ஊட்டச்சத்து திட்டம் எனும் விழிப்புணர்வு நிகழ்வை தமிழகத்தில் தொடங்க இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

நேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல் குறித்து பேசிய அவர், நேற்று அம்பேத்கர் பிறந்தநாள், திருமாவளவனுக்கு  மட்டும் தான் அம்பேத்கர் சொந்தம் என்பது போல அவர் செயல்படுகிறார். இந்த நாட்டில் அம்பேத்கர் பற்றி பேச தகுதி இல்லாத ஒருவர் இருக்கிறார் என்றால் அது திருமாவளவன் மட்டும் தான். நாட்டில் கம்யூனிஸ்ட்களை ஒழிக்க வேண்டும் என அம்பேத்கர் கூறினார். அதை பற்றி திருமாவளவன் பேசுவாரா என கேள்வி எழுப்பினார். அமைச்சர் பிடிஆர் பழனி வேல் டிவிட் குறித்து பேசிய அவர், ஆளுநர் கையெழுத்து போடவில்லை என்றால் உங்கள் எந்த பில்லும் பாஸ் ஆகாது என அவர் தெரிவித்தார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Annamalai: புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? பின்னணியில் 'செம' மாஸ்டர் பிளான்! தவெக 2.0 வெயிட்டிங்!
இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்கள் பட்டியல் வெளியீடு! CM Vijay-க்கு எத்தனையாவது இடம்?