இன்னும் 21 நாட்களில் ஆட்சி மாற்றம்...! ஸ்ட்ராங்கா சொல்லும் துரைமுருகன்...!

Asianet News Tamil  
Published : Jun 12, 2018, 01:27 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
இன்னும் 21 நாட்களில் ஆட்சி மாற்றம்...! ஸ்ட்ராங்கா சொல்லும் துரைமுருகன்...!

சுருக்கம்

within 21 days there is abiggest change in tn politics

இன்னும்  21  நாட்களில் ஆட்சி மாற்றம்...ஸ்ட்ராங்கா சொல்லும் துரைமுருகன்...!

இன்னும் 21 நாட்களில் ஆட்சி மாற்றம் வரும் என துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.

வேலூர் மாவட்டம் நெமிலியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட துரைமுருகன் சற்று ஆவேசமாக பேசி உள்ளார்.

இந்த கூட்டத்தில் திமுக துரைமுருகன், காந்தி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டம் நடைப்பெறுவதற்கு போலீசார் கெடுபிடி கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இதனால் சற்று கடுப்பான துரைமுருகன்.."இன்று மட்டுமில்லை..இனி வாரம் தோறும் இந்த இடத்தில் கூட்டம் நடைபெறும்..முடிந்தால் தடுத்து நிறுத்தி பாருங்களேன் என சவால் விடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், உங்களுக்கு தைரியம் இருக்கா..? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்....

காவல் துறையை கொண்டு, கூட்டத்தை நிறுத்த முயற்சி செய்தால்..கூட்டம் நடைப்பெறாதா என்ன ..? என்றும் ஆவேசமாக விளாசி உள்ளார்.

அப்போது, இன்னும்  21 நாட்களில் ஆட்சி மாற்றம் இருக்கும் என்றும் துரை முருகன் தெரிவித்து உள்ளார். இவ்வாறு இவர் பேசியபோது கூட்டத்தில் உள்ள தொண்டர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர் .

துரைமுருகனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் ஒரு சலசலப்பை  ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

அதிரப்போகுது தமிழகம்.. கெத்தாக வந்திறங்கிய பிரதமர் மோடி.. உற்சாகமாக வரவேற்ற திமுக அமைச்சர்!
NDA கூட்டணி மேடையில் மாம்பழம்.. அதிகார துஷ்பிரயோகம்.. பொங்கியெழுந்த ராமதாஸ்.. அன்புமணி பதில் இதுதான்!