ஒப்பற்ற அறிவாற்றலால், கடின உழைப்பு... ஜெயலலிதாவை நினைத்து கலங்கும் ஓ.பி.எஸ்..!

By Thiraviaraj RMFirst Published Dec 5, 2020, 12:44 PM IST
Highlights

தனது ஒப்பற்ற அறிவாற்றலால், கடின உழைப்பால், எண்ணற்ற தியாகங்களால் ஆயிரம் காலத்துப் பயிராக நிலைபெறச் செய்தவர் ஜெயலலிதா என அவரது இறந்த நாளில் அஞ்சலி செலுத்தினார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

 தனது ஒப்பற்ற அறிவாற்றலால், கடின உழைப்பால், எண்ணற்ற தியாகங்களால் ஆயிரம் காலத்துப் பயிராக நிலைபெறச் செய்தவர் ஜெயலலிதா என அவரது இறந்த நாளில் அஞ்சலி செலுத்தினார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘’மக்களுக்கான மாபெரும் பேரியக்கமாம் அஇஅதிமுக-வின் இதயமாய் வாழ்ந்து, ஒப்பற்ற உழைப்பின் மூலம் இந்த இயக்கத்தை வளர்த்து, கட்டிக்காத்து, கழகத்தை உறுதி மிக்க கோட்டையாக மாற்றி புகழ் பெறச்செய்த மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களை போற்றி வணங்குகிறேன்.  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிய கழகத்தை, தனது ஒப்பற்ற அறிவாற்றலால், கடின உழைப்பால், எண்ணற்ற தியாகங்களால் ஆயிரம் காலத்துப் பயிராக நிலைபெறச் செய்த புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தில் எனது நினைவஞ்சலியை சமர்ப்பிக்கிறேன். 

இந்திய அரசியல் வானில் சுடர்மிகு நட்சத்திரமாய் ஒளிவீசிய தங்கத்தாரகை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில், அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய இதயதெய்வம் அம்மா அவர்கள் நீடுதுயில் கொள்ளும் இந்நினைவிடத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களை போற்றி வணங்கி மரியாதை செலுத்தினோம்’’எனத் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக, கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
 

click me!