தமிழகம் வரும் பிரதமருடன் சந்திப்பா? ஓபிஎஸ் கூறிய பரபரப்பு தகவல்..!

Published : Nov 04, 2022, 02:39 PM ISTUpdated : Nov 04, 2022, 02:48 PM IST
தமிழகம் வரும் பிரதமருடன் சந்திப்பா? ஓபிஎஸ் கூறிய பரபரப்பு தகவல்..!

சுருக்கம்

அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர் தொண்டர்கள் இயக்கமாகத்தான் உருவாக்கினார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக உருவாக்கினார்கள்.  அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து மேலும் இந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

அதிமுகவில் அனைத்து தொண்டர்களும் ஒன்றாக இணைந்து இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் OPS ஆதரவாளர் இல்ல காதணிவிழா ஒன்றில் நேரில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-  அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர் தொண்டர்கள் இயக்கமாகத்தான் உருவாக்கினார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக உருவாக்கினார்கள்.  அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து மேலும் இந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

இதையும் படிங்க;- விடியலை நோக்கி ஆட்சி எனக் கூறிய திமுக..! ஒரு குடும்பத்திற்கு மட்டுமே விடியல் செல்கிறது - ஓபிஎஸ் ஆவேசம்

ஆளுநரை பதவி விலக வேண்டுமென திமுக அரசும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆளுநரின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற செய்தியாளரின் கேள்விக்கு:  ஆளுநரை பற்றி கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல. 

தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற செய்தியாளர் கேள்விக்கு:  பிரதமரை சந்திப்பதற்கான வாய்ப்பு இன்னும் அமையவில்லை பிரதமர் தமிழகம் வருவதற்கான தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக இல்லை. அப்படி வருவதாக இருந்தால் பிரதமரை சந்திப்பது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறேன் எனக் கூறிவிட்டு சென்றார். 

இதையும் படிங்க;-  நண்பன் எனக்கூறி அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் திமுக..! இருப்பதை பறிப்போம் என்பதுதான் திராவிட மாடலா- ஓபிஎஸ்

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

அந்த பக்கம் பொய்டாதீங்க.. விஜய் கூட்டணிக்கு செல்ல விடாமல் டிடிவி, ஓபிஸ்க்கு முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை..?
ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!