இரட்டை இலை நிரந்தரமாக முடக்கப்படுமா? இரு அணிகளும் கையெழுத்து போட்டதால் குழப்பம்!!!

First Published May 3, 2017, 3:00 PM IST
Highlights
Will Two leaf Symbol permanently disrupted?


அதிமுகவின் இரு அணிகளுக்கும் ஆதரவு தெரிவித்து, உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பிராமண பத்திரத்தில் கையெழுத்து போட்ட குழப்பத்தால், இரைட்டை இலை சின்னம் நிரந்தரமாக முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தால் மட்டுமே, இரட்டை இலை சின்னத்தை சிக்கல் இல்லாமல் பெற முடியும் என்ற நிலையம் ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொது செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்று பன்னீர் அணியினர் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்ததன் காரணமாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து சசிகலா மற்றும் பன்னீர் அணியின் சார்பில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்காக, பிராமண பத்திரத்தில் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.

பன்னீர் அணிக்கு ஆதரவு தெரிவித்த, உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளிடம், சசிகலா அணியினர் பிராமண பத்திரத்தில் கையெழுத்து பெற்று வருகின்றனர்.

அதேபோல், சசிகலா ஆதரவு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம், பன்னீர் அணியின் சார்பிலும் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு, உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் இரு அணிகளை சேர்ந்தவர்களும், கையெழுத்து வாங்கி உள்ளதால், யாருடைய ஆதரவு யாருக்கு என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இரு அணிகளின் சார்பில் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் பெறப்பட்ட பிராமண பத்திரத்தை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யும்போது, அதையே காரணம் காட்டி, தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்துவிடும்.

அதனால், இரட்டை இலை சின்னத்தை இரு அணிகளும் பெற முடியாமல் போய்விடும் என்று கூறப்படுகிறது. எனவே, இரு அணியை சேர்ந்தவர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அதிமுக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கேட்டால், இரு அணிகளை சேர்ந்தவர்களும் தொடர்ந்து வற்புறுத்துவதால், எங்களுக்கு வேறு வழியில்லை என்று கூறுகின்றனர்.

இவற்றை எல்லாம் பார்க்கும் போது, இரட்டை இலை சின்னம், யாருக்கும் இப்போது கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. 

இரு அணிகளும் இணைந்தால்  மட்டுமே, இரட்டை இலை சின்னத்தை பெறமுடியும் என்றே தெரிகிறது.

ஆனால், அணிகள் இணைப்புக்கு பன்னீர் தரப்பில் விதிக்கப்படும் நிபந்தனைகளை ஏற்க முடியாத நிலையில் எடப்பாடி தரப்பினர் இருப்பதால், அணிகள் இணைப்புக்கு தற்போது வாய்ப்பு இல்லை என்று தோன்றுகிறது.

அதனால் இரட்டை இலை சின்னம் எந்த அணிக்கும் கிடைக்காமல், தேர்தல் ஆணையத்திலேயே முடங்கி கிடைக்கும் சூழலே உருவாகி உள்ளது.

இந்நிலையில், வரப்போகும் உள்ளாட்சி தேர்தலை, அதிமுகவின் இரு அணிகளும் எப்படி சமாளிக்க போகின்றன? என்பதே அதிமுக தொண்டர்களின் கவலையாக உள்ளது.

click me!