பலமுறை கண்டித்த பின்னும் இப்படியா நடக்கும்..? சிறுவன் தினேஷுக்காக மு.க.ஸ்டாலின் வருத்தம்..!

By Thiraviaraj RMFirst Published Aug 23, 2021, 6:10 PM IST
Highlights

விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி இளம் வயதான தினேஷ் மரணம் அடைந்திருப்பது எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 வயதேயான தினேஷை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்திற்கு அமைச்சர் பொன்முடி சென்றிருந்தார். அப்போது பொன்முடியை வரவேற்க திமுக கொடிக்கம்பம் நட்ட சிறுவனை மின்சாரம் தாக்கியது.  மினாரம் தாக்கியதில் படுகாயமடைந்த 13 வயது சிறுவன் தினேஷ், முண்டிப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுகுறித்து இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின், ‘’விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி இளம் வயதான தினேஷ் மரணம் அடைந்திருப்பது எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களை பலமுறை கண்டித்தும் தொடர்வது வருத்தமளிக்கிறது 

பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனது வேண்டுகோளை திமுகவினர் கட்டளையாக ஏற்று செயல்படுத்த வேண்டும். பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களைப் பலமுறை கண்டித்த பின்னும் இதுபோன்ற விரும்பத்தகாத - கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்வது என்னை வருத்தமடைய வைக்கிறது’’என அவர் தெரிவித்தார்.  
 

click me!