சட்ட ரீதியாக நீதிமன்றம் சென்றால் அரசாணை செல்லுமா, செல்லாதா? பகீர் கேள்வி எழுப்பும் மு.க.ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Oct 30, 2020, 12:25 PM IST
Highlights

தமிழக அரசின் நிர்வாகம் கெட்டுபோய் உள்ளது. 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அரசாணையை முன்பே கொண்டுவந்திருக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக அரசின் நிர்வாகம் கெட்டுபோய் உள்ளது. 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அரசாணையை முன்பே கொண்டுவந்திருக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவரும் தமிழகச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58-வது குருபூஜை ஆகியவற்றை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசு இடஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளதை வரவேற்கிறேன். காலம் தாழ்த்தாமல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.  மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பே 7.5% உள்ஒதுக்கீடு அரசாணையை வெளியிட்டிருக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டே மருத்துவபடிப்பில் இடம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மருத்துவ படிப்பு கலந்தாய்வை விரைவுபடுத்தி அரசு மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்க செய்ய வேண்டும். சட்ட ரீதியாக அரசாணை செல்லுமா, செல்லாதா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். நீதிமன்றம் சென்றால்  அரசாணை இருக்குமா, இருக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் செய்வதாக கூறுகிறார் முதல்வர் பழனிசாமி, அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

click me!