நடந்தது கொலை தான்.. எதிரிகள் கைது செய்யப்படுவரா? திமுக எம்.பி.க்கு எதிராக கொதிக்கும் ராமதாஸ்..!

By vinoth kumarFirst Published Sep 23, 2021, 8:11 AM IST
Highlights

உடலை எக்ஸ்ரே எடுக்க வேண்டும், உடற்கூறாய்வை காணொலி பதிவு செய்ய வேண்டும்,  மூன்றாவது தரப்பு மருத்துவர் ஒருவர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருப்பதன் மூலம் இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

பாமக நிர்வாகி கோவிந்தராசுவின் உடற்கூறாய்வை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது நிறைவளிக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பத்தில் செயல்பட்டு வரும் கடலூர் எம்.பி. திமுக உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளர் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கில், முறையாக விசாரணை நடத்தாமல் எதிரிகளைத் தப்பிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக ராமதாஸ் குற்றம்சாட்டினார். இது தற்கொலை அல்ல கொலை என அவரது மகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு இன்று பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பண்ருட்டி மேல்மாம்பட்டு  பா.ம.க நிர்வாகி கோவிந்தராசுவின் உடற்கூறாய்வை புதுவை ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு முண்டியம்பாக்கம்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது நிறைவளிக்கிறது.

உடலை எக்ஸ்ரே எடுக்க வேண்டும், உடற்கூறாய்வை காணொலி பதிவு செய்ய வேண்டும்,  மூன்றாவது தரப்பு மருத்துவர் ஒருவர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருப்பதன் மூலம் இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

நடந்தது கொலை தான் என்பதற்கான  குறிப்புகள் முதல் தகவல் அறிக்கையில் இருக்கும் நிலையில் கொலை வழக்கு பதிவு செய்யாமல், சந்தேக மரணம் என பதிவு செய்திருப்பது குறித்து நீதிபதி அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதன்பிறகாவது கொலை வழக்காக மாற்றி எதிரிகள் கைது செய்யப்படுவரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!