நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இரட்டை இலை சின்னம் முடக்கமா? வைத்தியலிங்கம் சொன்ன பரபரப்பு தகவல்!

By vinoth kumar  |  First Published Jan 24, 2024, 10:20 AM IST

எடப்பாடி பழனிசாமி பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு  செயல்பட்டார். இபிஎஸ் தன்னை சூப்பர் புரட்சி தலைவர் என்று நினைத்துக் கொண்டுருக்கிறார். இபிஎஸ் முதல்வராக இருந்த  போது 5 ஆண்டுகளிலும் அவரை ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே சந்திக்க முடிந்தது. 


எடப்பாடி பழனிசாமியை தவிர அனைவரும் அதிமுகவை இணைக்க தயாராக இருக்கிறார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார். 

தஞ்சையில் நேற்றிரவு முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் சார்பில் அதிமுக உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர்;- அதிமுக இணைப்பதற்கு எடப்பாடி பழனிசாமியை தவிர அனைவரும் தயாராக இருக்கின்றனர். அதிமுக தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று நினைத்து யாராவது தேர்தல் ஆணையத்தை அணுகினால் மக்களவை தேர்தலுக்கு முன்பாக இரட்டை இலை முடங்க வாய்ப்புள்ளது. 

Latest Videos

இதையும் படிங்க;- வேறு வழியே இல்லை.. உச்சநீதிமன்றம் கதவை தட்டிய திமுக அமைச்சர்கள்.. இடையில் புகுந்த அதிமுக, பாஜக.!

எடப்பாடி பழனிசாமி பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு  செயல்பட்டார். இபிஎஸ் தன்னை சூப்பர் புரட்சி தலைவர் என்று நினைத்துக் கொண்டுருக்கிறார். இபிஎஸ் முதல்வராக இருந்த  போது 5 ஆண்டுகளிலும் அவரை ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே சந்திக்க முடிந்தது. கட்சிக்காரர்களை எடப்பாடி சந்திக்கவே இல்லை என்று குற்றம்சாட்டினர். 

இதையும் படிங்க;- எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுக சேர்மன்.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!

மோடியுடன் கூட்டணி இல்லை என்று கூறுகிற எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா சொன்னது போல் சொல்வாரா? லேடியா மோடியா பார்த்துவிடலாம் என்றாரே, அது போல் எடப்பாடியா மோடியா என்று இவர் கூறுவாரா? என கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிசாமி தனித்து போட்டியிட்டால் சேலத்தில் கூட டெபாசிட் பெற முடியாது. இபிஎஸ் இல்லாமல் கட்சியை இணைப்போம். அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் மட்டுமே 40 தொகுதிகளும் வெற்றி பெற்று பெற முடியும் என வைத்தியலிங்கம் கூறியுள்ளார். 

click me!