
ஊழல் குற்றச்சாட்டுடன் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுக அரசு கைது செய்யுமா என அதிமுக முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி பொருப்பேற்ற பிறகு அசாதாரண சூழல் நிலவுகிறது எனவும், காவல்துறையின் நுரையீரல் முழுவதும் கெட்டுவிட்டது எனவும் முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் குற்றம்சாட்டினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர். என். ரவியை அதிமுகவின் சட்ட வல்லுநர் குழு உறுப்பினர்கள் நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்னைகள் குறித்து புகார் மனுவை அளித்தனர். இந்த சந்தின் பொழுது, அதிமுகவின் சட்ட வல்லுநர் குழு உறுப்பினர்கள் ஜெயகுமார், சி. வி. சண்முகம், தளவாய் சுந்தரம், மனோஜ் பாண்டியன், இன்பதுரை, பாபு முருகவேல் ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல், பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.ஆளும் கட்சியால் தொடர்ந்து மக்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு அச்சுருத்தல்கள் ஏற்பட்டுள்ளது என கூறினார்.தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம்,
காவல்துறை திமுகவின் தொண்டர் படையாக மாறியுள்ளது. அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு, சட்ட விதிகளை பின்பற்றாமல், அச்சுறுத்தலில் ஈடுபட்டு வருகிறது. காவல்துறை ஆட்கடத்திலில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவி சண்முகம் புகார் கூறினார். தமிழகத்தில் முழுமையாக சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. திமுகவினர் காவல்துறைக்கு அதிக அழுத்தம் கொடுக்கின்றனர் காவல்துறையினரை தற்கொலைக்கு தூண்டும் நிலைக்கு திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
மேலும் அதிமுக அரசில் திமுகவினர் மீது வழக்கு தொடர்ந்தாலும், யாரையும் கைது செய்ததில்லை .ஆனால் தற்பொழுது பழிவாங்குவதற்காக அதிமுகவினரை இரவு நேரங்களில் கைது செய்கின்றனர். திமுக அமைச்சரவை குற்றவாளிகள் நிறைந்த அமைச்சரவை என்றும் அமைச்சரவையில் 23 பேருக்கு குற்றவழக்கு இருப்பதாகவும் அமைச்சர் சி வி சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் ராஜேந்திர பாலாஜி மீது போடப்பட்டுள்ள வேலை வாங்கி தருவதாக போடப்பட்ட வழக்கு போல, செந்தில் பாலாஜி மீதும் இதே வழக்கு உள்ளது. இதனால் செந்தில் பாலாஜி யை கைது செய்ய அரசுக்கு முடியுமா? அதிமுக அரசு நினைத்திருந்தால் செந்தில் பாலாஜியை கைது செய்திருக்க முடியும் என்றும் கூறினார்.
அதிமுக நிர்வாகிகள் வேலூரில் 2 பேர் கைது செய்யப்பட்டு, 4 நாட்கள் ஆகிறது, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல், எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்று கூட தெரியவில்லை. தமிழ்நாட்டிலேயே தற்போது எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் மாணவர்கள், இளைஞர்களுக்கு எளிதாக போதை பொருட்கள் கிடைக்கின்றது. இந்த ஆட்சி ஆரம்பித்ததிலிருந்து கொலைகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைகள் என்ன பல்வேறு குற்றங்கள் அதிகரிக்கிறது வருவதாகவும், திமுக ஆட்சி பொருப்பேற்ற 200 நாட்களில் 557 கொலைகள் நடைபெற்றுள்ளது.விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் கடத்தல், ரவுடிதனம் நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட விசாரணையில் உள்ள அதிமுகவினருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு காவல் கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் மாவட்ட காவல்துறையும் தான் காரணம் என்று கூறினார்.
மேலும் அமைச்சர்கள் மீது நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகளை மறு விசாரணை செய்து, அவர்களை வழக்குகளில் இருந்து தப்பிக்க வைக்க திமுக அரசும் ஸ்டாலினும் ஈடுபட்டுள்ளனர். இதனால் அமைச்சர்கள் மீதான வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்
இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் ஆளுநருக்கு வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
நேற்று புயல் இல்லாமல், மழை மட்டுமே பெய்தது, அதில் 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழிந்தனர் .ஆனால், அதிமுக ஆட்சியில் வந்த கஜா புயல் போல புயல் வந்தால் அந்த புயலில் ஸ்டாலினும் காணமல் போய்விடுவோர். பருவமழைக்கு முன்னெச்சரிக்கை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, மழை நீர் தேங்காது எனவும், முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும், மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். ஆனால், அவரது இல்லம் இருக்கும் பகுதியிலே தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் திமுக நீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தது அந்த தீர்மானம் ஒரு நாடகமாகும் என்றும், மாணவர்களை திசை திருப்பாமல், உள்ளதை அதிமுக அரசு தெரிவித்தது. ஆனால், உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு ரத்துக்கு என்ன செய்தார் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.