
2026ல் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக 150 எம்.எல்.ஏக்களை பெற்று ஆட்சி அமைக்கும் என பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அரசியலில் இணைவதற்காக ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா செய்தவர் அண்ணாமலை. அவரை பா.ஜ.க., மாநில தலைவராக நியமித்து அக்கட்சியின் தேசிய தலைமை கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டது. இந்நிலையில், கோயம்புத்தூரில் இருந்து சென்னை வரை யாத்திரைப்போல வந்த இன்று பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில் தாம்பரத்தில் செங்கல்பட்டு மாவட்ட பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை ’’2026ல் தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டிலிலி அமருவதே இலக்கு.
20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. 2026ம் ஆண்டு 150 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைப்போம். இன்னும் 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதற்கான விதைகளை தூவுவோம்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் 2001ம் ஆண்டு கிருபாநிதி தமிழ்மாநில பாஜக தலைவராக இருந்தபோது திமுக கூட்டணியில் 21 இடங்களில் போட்டியிட்டு பாஜக 4 இடங்கங்களில் வெற்றி பெற்றது. ஆனால், அப்போது திமுக ஆட்சி அந்தஸ்தை இழந்தது. 20 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்து 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக மீண்டும் அதே 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. இந்நிலையில் 2026ம் ஆண்டு பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியை அமைக்கும் அதன் மாநில தலைவர் அண்ணாமலை தொண்டர்களுக்கு உற்சாகமளித்து வருகிறார். இப்போதும் அதிமுக கூட்டணியில் 4 இடங்களில் வென்றுள்ளது பாஜக. இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் 150 இடங்களில் வெல்ல முடியுமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு என்ன வியூகம் வகுக்கப்போகிறார் அண்ணாமலை என்கிற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.