2024ல் ஆட்சி அமைக்கப்போவது காங்கிரஸ் கட்சியே... வீரியமாக தயாராகி வரும் கதர் சட்டைகள்..!

By Thiraviaraj RMFirst Published Jul 16, 2021, 3:15 PM IST
Highlights

2014-ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். இதை மனதில் வைத்து அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் தாயாராகி வருகிறோம்.
 

2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தோல்வியை தழுவியது. அடுத்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்து பாஜகவே வென்று ஆட்சி அமைத்து வருகிறது. இந்நிலையில், 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போம், ராகுல் காந்தி தலைமையில் வெல்வோம் என மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “எதிர்க்கட்சியான பா.ஜ.க.,வை தாக்கும் பணியே எனக்கு வழங்கப்பட்டு உள்ளது. மகா விகாஷ் அகாடி அங்கத்தினரான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசையோ, சிவசேனாவையோ எதிர்க்கும் பணி அல்ல. 2014-ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். இதை மனதில் வைத்து அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் தாயாராகி வருகிறோம்.

2024-ம் ஆண்டு ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக ஆட்சிக்கு வரும். பா.ஜ.க., நாட்டை முழுமையாக விற்பனையாக்கி விட்டது.  ஆனால், அதேநேரம் மக்கள் கொரோனா போன்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகரித்துவரும் பணவீக்கத்தால் அவர்களின் நிலைமை மோசமாகியுள்ளது. தேசிய அளவில் பா.ஜ.க.,வை வீழ்த்த காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும்’’என அவர் தெரிவித்துள்ளார். 
 

click me!